பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்திகன் பெருங்கோயில் 313.

உருவம்; மற்ருெருத்தி திேயின் வடிவம், திேயும் அறமும் போப்பாண்டவரின் ஆட்சியில் தழைத்து ஓங்குவதை இந்தச் சிற்ப அமைப்புக் காட்டுகிறது. இப்படியே அருங் குணங்களைப் புலப்படுத்தும் உருவங்கள் அமைந்த சிற்ப வடிவங்கள் அங்கங்கே இருக்கின்றன. ஒரிடத்தில் 13 ஆவது கிரிகளி என்ற போப்பாண்டவரின் சிற்பத் திருவுருவம் இருக்கிறது. அவர் முடியணிந்த கோலத்தில் அமர்ந்து தம் வலக் காத்தை உயரே தூக்கி வாழ்த்துகிருர். அவர்முன் சமயமும் ஞானமும் மகளிர் வடிவில் அமர்க் திருக்கின்றன. மற்ருே.ரிடத்தில் மூன்ரும் பவுலின் சிற்பத்தில் திேயும் சிக்கனமும் வடிவு பெற்று விளங்கு கின்றன.

திருக்கோயிலினுள்ளே சுற்றிப் பார்க்கப் பார்க்க வியப்பு மீதுார்ந்து வந்தது. சிற்பிகளிள் உன்னதமான கற்பனையை மெச்சுவதா? அவர்கள் கற்பனையை உருவாக்க வும் இங்கே அந்தச் சிற்ப வடிவங்களே அமைக்கவும் ஆதரவு தந்தவர்களே வியப்பதா? இவற்றையெல்லாம் தூய்மை மாருமல் வைத்துப் பாதுகாப்பவர்களைப் பாராட்டுவதா?

சுற்றிப் பார்க்கப் பார்க்க ஒரு வகையில் மனம் கிறைவு பெற்ருலும் கன்ருகப் பார்க்க முடியவில்லை என்ற குறையும் ஒருபால் இருக்கத்தான் இருந்தது. எதைப் பார்ப்பது? எதை விடுவது? எத்தனே எத்தனே சிற்பிகள் தம் வாழ்க் கைப் பயனக எண்ணிப் படைத்த சிற்பக் கருவூலங்கள் இவை இவற்றை வாழ்நாள் முழுவதும் பார்த்துப் பார்த்து மகிழலாம்; வியக்கலாம்; பாராட்டலாம்; அந்த அழகிலும் உட்கருத்திலும் மனத்தைப் பறி கொடுத்து எல்லாவற்றை யும்,மறந்து ஒருவகைச் சமாதியிலே ஆழ்ந்துவிடலாம்.

நானும் அன்பர் சா. கணேசனும் ஒரு கோச்சில் ஏறி இந்தத் திருக்கோயிலைப் பார்க்கப் புறப்பட்டோம். வழக்கம் போல் விளக்கம் கூறும் வழிகாட்டி ஒருவர் எங்களுடன் வந்தார். ஐம்பது அறுபது பேர் அடங்கிய கூட்டத்துக்கு அவர் விவரங்களே விளக்கி வந்தார். நடமாடும் வகுப்பாக