பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வத்திகன் பெருங்கோயில் 315

டாக்ளிக்காரர் நான் இந்தியன் என்பதைப் புரிந்துகொண்

டார். 'என்ன வேண்டும்?' என்று ஆங்கிலத்தில் கேட்டார். அப்போது எனக்கு உயிர் வந்தது. "நான் ஒய். எம். ஸி. ஏ. போகவேண்டும். எது வழி?' என்றேன். 'எனக்கு

அந்த இடம் தெரியும். ஏறுங்கள் போகலாம்' என்ருர்,

டாக்ஸியில் மீட்டர் இருந்ததோ இல்லையோ நான் கவனிக்க

வில்லை. "1500 லிரா தரவேண்டும்' என்ருர். சமய

சஞ்சீவி போலக் கிடைத்தவரை விடுவதற்கு மனம் வரவில்லை. எவ்வள தூரம் போகவேண்டுமென்று எனக்குத்

தெரியாது. அந்த ஊர் டாக்ஸிக்காரக்கள் நம் ஊர்க்காரர்

களேப் போல ஏமாற்றுவார்கள் என்பதை முதல் காளில்

அறிந்தேன். ஆனலும் என்ன செய்வது? அவர் கேட்ட வாடகையைக் கொடுக்கச் சம்மதித்து அதில் ஏறினேன்.

ஒய். எம். வி. ஏ. வந்தபோது சொந்த வீட்டுக்கே வந்தது போல ஆறுதல் உண்டாயிற்று. அறைக்குப் போய்த் திறந்து நுழைந்தேன். அன்பர் சா. கணேசன் வரவில்லே. "நம்மைத் தேடிக்கொண்டு அவர் எங்கே சுற்றுகிருரோ? அல்லது நம்மைப் போலவே எங்காவது கின்றுவிட்டுத் திண் டாடுகிருரோ?' என்ற கவலையோடு இருந்தேன்.

சிறிது நேரத்தில் கணேசன் வந்தார். உண்மையில் அம்போதுதான் பூர்ணமான ஆறுதல் உண்டாயிற்று. "உங் களே எங்கெல்லாம் தேடுகிறது?’ என்ருர் அவர். நானும் அதே கேள்வியைக் கேட்டேன். "நாம் வந்த பஸ்ஸை வேறிடத்தில் கொண்டுபோய் கிறுத்தியிருந்தார்கள். அங்கே போனேன். உங்களைக் காணவில்லை. பஸ் போய்விட்டது. சில இடங்களைப் பார்த்துவிட்டு வேறு பஸ்ஸில் ஏறி வங் தேன். உங்களைக் கண்ட பிறகுதான் உயிர் வந்தது' என்ருர் அவர்.

"பஸ்ஸுக்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?' என்று கேட் டேன். '50 லிரா" என்ருர் அவர்.