பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 கண்டறியாதன கண்டேன்

தவுடன், போப்பாண்டவராகத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தவர் மட்டும் விதானத்தின்கீழ் அமர்வார். மற்ற வர்களுடைய விதானத்தை எடுத்துவிடுவார்கள்.

இந்தத் தேர்தல் நடைபெறும் போது வெளியில் மிகப் பெருங்கூட்டம் காத் கிருக்கும். உலகிலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் தனிப்பெருந்தலவராக உள்ள ஒருவருடைய தேர்தல் அல்லவா? காத்திருக்கிறவர் களுக்குத் தேர்தலின் முடிவைப் புகையின் மூலம் அறிவிப்பார்கள். -

இந்த மண்டபத்தில் ஒர் ஒரத்தில் கூரையில் புகை போக்கி இருக்கிறது. தேர்தல் நடைபெறும்போது அதில் சில சமயங்களில் கரும் புகையும் சில சமயங்களில் வெண் புகையும் வரும். கரும் புகை வந்தால், இன்னும் தேர்தல் முடிந்த முடிவுக்கு வாவில்லே என்று பொருள். போதிய வாக்ககளைப் பெருத போதெல்லாம் கரிய புகையே வரும், முடிவாகப் போப்பரசரைத் தேர்ந்தெடுத்துவிட்டால் வெள்ளேப்புகை வரும். வோட்டளிக்கும் காகி தங்களோடு ஈரமான வைக்கோலையும் சேர்த்து எரித்தால் கரிய புகை வரும். தேர்தல் முடிந்தபோது வாக்குச் சிட்டுகளே மாத்திரம் எரிப்பார்கள். அப்போது வெண்புகை வரும்.

வெண்புகை வரும்போது தேர்தல் முடிந்து விட்ட தென்று யாவரும் ஆரவாரிப்பார்கள். இன்னர் தலைவரானர் என்பதை உடனே அறிவிப்பார்கள்.

இந்த மண்டபத்தின் மேல் கூரையில் பெரிய பெரிய ஒவியங்களே எழுதியிருக்கிருர்கள். அவற்றைத் திட்டு வதற்காகப் பெரிய ஏணி ஒன்றை மைக்கேலாஞ்சலோ செய்தாராம். அதை இன்றும் இங்கே பார்க்கலாம். சென்னை நகரசபையில் எலக்ட்ரிக் கம்பிகளைச் செப்பஞ் செய்ய, வைத்திருக்கும் தேரைப் போன்ற ஏணி இருக்கிறதே, அம்மாதிரியான அமைப்பை உடையது இந்த ஏணி. ஆனல் அதைவிட எவ்வளவோ மடங்கு பெரியது, அகலமானது. p.uuJTLDIT@!ġil • -