பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகை காட்டும் முடிவு 32;

எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒய்.எம்.சி.ஏ. வந்தோம். ஏர் இந்தியாவில் கணக்குத்துறை அதிகாரியாக இருந்த கிரு சேகர் எங்களை உணவுக்கு அழைத்திருந்தார். அவர் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தார். பாதாள ரெயிலில் ஏறி அவர் வீடு சென்ருேம். அவர் இருக்கு மிடத்தில் பல அமைச்சராலயங்கள் இருக்கின்றன. மிக உயர்ந்த கட்டிடங்கள். ஒரு செயற்கை எரியும் பூங்காவும் அவ்விடத்தில் இருக்கின்றன.

சேகர் வீட்டில் தமிழ்நாட்டுச் சமையலச் சாப்பிட் டோம். ரசம், குழம்பு, கறி எல்லாம் கிடைத்தன. "ரசமுள்ள சாப்பாடு இங்கேதான் கிடைத்தது' என்று சொன்னேன். சேகர் தமிழ் நாட்டவர். அவர் குமாரன் சிறியவன். அவனை யாரும் "ரொபெர்ட்டோ' என்று அழைத்தார்கள். "இவனுக்கு என் இந்தப் பெயரை வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

"இவன் பெயர் லகன்,மீகாராயணன். இங்குள்ள வேலைக் தாரிக்கு அந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. ஆகையால் ரொபெர்ட்டோ என்று அழைத்தாள். அப்படியே எல்லாரும் அழைத்து வருகிருேம்' என்று பையனின் தாயார் விளக்கினர்.

மறுநாள் (31-7-1970) பஸ் ஏறி ஸெயிண்ட் பீட்டர் திருக்கோயில் போனேம். பயணிகள் கோச்சில் ஏறிப் போகாமல் சாதாரணக் கோச்சில்தான் போனேம். கோயி லுக்குள்ளே போகாமல் புறத்திலே உள்ள காட்சிகளே யெல்லாம் கண்டோம். சிவப்பும் லேமும் மஞ்சளுமாக அமைந்த நீண்ட அங்கிகளே அணிந்துகொண்ட காவற் காரர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களே ஸ்விஸ் கார்டுகள் (Swiss Guards) என்கிருர்கள். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்தவர்களாம். பார்ப்பதற்குக் கோமாளிகளைப் போல இருக்கிருர்கள்.

இரண்டு குதிரை பூட்டிய ஸாரட்டு வண்டிகளும் அங்கே உலாவின. பழமையின் சின்னங்களும் புதுமையின்

கண்டறி-21