பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஊர் திரும்பினேன்

நாங்கள் ஏர் பிரான்ஸ் விமானத்தில் வந்தோம். அது போயிங் விமானம். பயணம் சுகமாக இருந்தது. 6-15 மணிக்கு ரோமை விட்டுப் புறப்பட்டது.9-65க்குப் பெய்ரூத் (Beirாt) வந்து சேர்ந்தது. விமானக்காரர்கள் நாங்கள் பெய்ரூத்தில் தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து தந்தார்கள். விமான கிலேயத்திலிருந்து அவர்கள் செலவில் டாக்ஸியை அமர்த்தி ஒரு ஹோட்டலுக்கு அனுப்பினுர்கள். இரட்டை அறை ஏற்பாடு செய்தார்கள். அறை வாடகை முதலிய யாவும் விமானக்காரர்கள் செலவே. பிளாஸா என்ற ஹோட்டல் சென்று உறங்கினேம்.

மறுநாள், ஆகஸ்டு மாதம் முதல் தேதி (1970). எப்போதும் புதிய புதிய இடங்களையும் மனிதர்களையும் காட்சிகளேயும் கண்டு கொண்டிருந்த எனக்கு மாதம் தெரிய வில்லை; தேதி கினேவு இல்லை; கிழமையும் கிக்னவில்லை. டைரியைப் பார்க்கிறபோதுதான் அவை தெரியும், ஒவ்வொரு நாளும் புதியதாக இருந்தது. ஊரில் அப்படி இல்லையே! வழக்கமான பாதையில் போகும் வண்டிபோல இருப்பது சொந்த ஊர் வாழ்க்கை. அங்கே தேதி தெரியும்; கிழமை தெரியும்; மணி நன்ருகத் தெரியும். நான் பயணம் ச்ெய்தபோதோ இரவு பகல் என்ற வேறுபாடுகூட அவ்வள வாகத் தெரியவில்லை. படுத்து உறங்கும்போது இரவு: மற்ற வேளைகள் எல்லாம் பகலைப்போல இருந்தன. என்னுடைய உள்ளம் குழந்தையின் உள்ளத்தைப் போல அடுத்தடுத்துக் காண வேண்டிய காட்சிகளைப் பற்றியே சிந்தித்தது. புதிய காட்சிகளைக் காணக் காண வியப்பும்