பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற சந்திரன் 27

மங்கையரும் கட்டிளங் காளேயரும் செல்லும்போதே ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டார்கள். இதழும். இதழும் இணைந்தன. ஜனக் கடலுக்கு நடுவில் இந்தக் காதற் காட்சி ஒன்ரு, இரண்டா? அருமையாக இருந்தால் அது வியப்பை உண்டாக்கும். நடைபாதையில், பஸ் கிற்கும் இடத்தில், மரத்தடியில், மரத்தடிக் கடைகளில் எங்கும் இந்த இதழ் பொருந்தும் காட்சியைக் காசு கொடுக்காமலே காணலாம். சிற்பங்களில் காணும் காதற் காட்சிகளே கேரிலும் காணும்படி இருந்தது, அவர்கள் கோலம். சுறுசுறுப்பு, களிப்பு, அலங்காரம், இன்ப வேட்கை இவை அந்த மண்ணுக்கே உரிய பண்புகள் போலும்

நம் நாட்டில் உள்ள சிற்பங்களில் மங்கையரின் வடிவத்தையே பெரும்பாலும் காணுகிருேம். செயற்கை யின் தொடர்பில்லாத இயற்கை வடிவத்துடன் அமைத்த, பெண் சிற்பங்களைப் பல பங்களாக்களிலும் பார்க்க லாம். அப்பொழுதெல்லாம் நான் எண்ணமிடுவதுண்டு: 'இப்படிப் பெண்களின் வடிவங்களேயே காட்டுகிருர்களே: ஆண்களின் இயல்பான வடிவத்தை ஏன் காட்டுவதில்லே?" என்று யோசிப்பேன். ஆடவர்களின் பசிதான் மிகுதி; பெண்கள் காணமுடையவர்கள். இந்தியாவில் இதுதான் இயல்பு என்று ஒருவாறு முடிவுக்கு வந்தேன்.

ஆனல் பாரிஸில் இந்த ஒரு வழிப்பயணம் இல்லை. சாலைகளில்மட்டும் ஒரு வழிப்பயணமே இருக்கிறது. . சிற்பத்தில் இரு வழிப் பயணமும் இலங்குகிறது. பெண்ணின் இயல்பு வடிவத்தைக் கோலம் செய்திருக்கும் சிற்பி, ஆணின் வடிவத்தையும் செயற்கையின் கவச மின்றியே வடித்திருக்கிருன். அத்தகைய வடிவங்களேப் பார்த்தபோதெல்லாம், அந்த நாட்டில் ஆண் பெண். என்னும் இரு பாலாருக்கும் இன்ப நுகர்ச்சியில் சம. உரிமையும் பசியும் உண்டென்பதை உணர்ந்து கொண்டேன். கண்முன்ல்ை கண்ட உண்மைக் காட்சி