பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் திரும்பினேன் 325

ஹோட்டல்காரர்களும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு அழைக்கிருர்கள்.

பெய்ரூத்தில் மிகுதியாக வாழ்கிறவர்கள் முஸ்லிம்கள். பழைய நகரம் ஒன்றும் புதிய நகரம் ஒன்றும் இணைக் துள்ளன. கடற்கரைக்கு அருகில் புதிய நகரம் முளேத்துச் சிறப்புடன் விளங்குகிறது. பழைய முஸ்லிம் பாணியில் உடையணிந்தவர்களையும் புதிய நாகரிக மோஸ்தரில் உலவு கிறவர்களையும் இங்கே பார்க்கலாம். இங்கே அரபு மொழி பேசுகிருர்கள். பலகைகளில் ஆங்கிலத்திலும் பெயர்களை எழுதியிருக்கிருர்கள். அமெரிக்கர் முதலிய பிற காட்டு மக்கள் அதிகம்ாக இங்கே வந்து போகிருர்கள். அதனல் தான் அரபு மட்டுமே என்று விரதம் கொள்ளாமல் ஆங்கிலத்துக்கும் இடம் கொடுத்திருக்கிருர்கள். -

லெபனன் ஒரு குடியரசு, குடியரசுத் தலைவரே ஆட்சிப் பீடத்தில் இருக்கிருர் நாடாளுமன்றத்தில் 99 உறுப் பினர்கள் இருக்கிருர்களாம். .

எங்கும் சுற்றிப் பார்க்க ஒரு டாக்ளியை அமர்த்தினுேம், டாக்ளிக்காரர்காலு டாலருக்கு ஊர் முழுவதையும் சுற்றிக் காட்டுகிறேன் என்ருர். அரைகுறை ஆங்கிலத்தில் பேசினர்.

"இது சின்ன ஊர்தானே? இதைச் சுற்றிப் பார்க்க அவ்வளவு பணமா?' என்று கேட்டேன்.

"இங்கே பாருங்கள்: நான் உங்கள் மகன் மாதிரி. கான் ஏமாற்ற மாட்டேன். ஏமாற்றுவது பாவம். கடவுள் சாட்சியாக இருக்கிருர். அவர் சும்மா விடமாட்டார். கான் 'எல்லா இடங்களையும் காட்டுகிறேன்' என்று டாக்ளிக்காரர் சொன்னர். அவருடைய பணிவான பேச்சில் உண்மைதான் ஒலிக்கும் என்று நம்பி ஏறினுேம். எங்கள் நம்பிக்கை iன் போகவில், போகிற இடங்களில் உள்ள சிறப்பை யெல்லாம் அந்த டாக்ளிக்கர்ரர் எடுத்துச் சொன்னர்.