பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் திரும்பினேன் 327.

உள்ளே உள்ள பழைய நகரத்துக்குப் போனுேம். அங்கே வீடுகளும் பழைய மாளிகைகளும் நெருக்கமாக இருந்தன. ஒரு பழைய மசூதிக்கு அழைத்துச் சென்ருர் டாக்ளிக்காரர். அது மிகப் பழைய காலத்தில் மகுதியாக இருந்ததாம். அதன் பிறகு சர்ச் ஆயிற்ரும். மறுபடியும் மகுதியாகி விட்டதாம். மிகப்பழைய மசூதி இது என்று சொன்னர்கள். சர்ச்சாக இருந்ததற்குரிய சில அடையாளங்களை அந்தச் சாரதி காட்டினர். l

அந்த ஊரில் பண்டங்கள் சற்றே மலிவாக இருந்தன. எல்லாம் அயல்நாட்டுச் சரக்குகள். பல இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தோம்.

மசலேயில் விமானக்காரர்கள் டாக்ளி வைத்து எங்களே விமான கிலேயத்துக்கு அழைத்துச் சென்ருர்கள். 5-30 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 6க்குத்தான் புறப்பட்டது. பி. ஒ. ஏ. சி. விமானம்.

எல்லா விமான கிலேயங்களிலும் விமானத்துக்குப் போகும் தாரம் சிறிதாக இருந்தாலும் கோச்சில்தான் அழைத்துச் சென்ருர்கள். இந்தியாவில்தான் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஆனல் மற்ற நாடுகளில் விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகக் கட்டணம் உண்டு; இந்தியாவில் இல்லை.

இரவு 12 மணிக்கு விமானம் ஒரிடத்தில் இறங்கியது. ஸஆகி அராபியாவைச் சேர்ந்த துபாய் என்ற நகரம் அது. விமான நிலையத்தில் உள்ள கடையில் வெளிகாட்டுப் பண்டங்களை மலிவான விலையில் விற்கிருர்கள். அன்பர் கணேசன் ஒரு கடியாரம் வாங்கினர்.

ஸ்வூதி அராபியா முஸ்லிம்கள் வாழும் நாடு. விமான நிலையத்தில் வளைய வருகிற ஆண்களேயும் பெண்களையும் பார்த்தபோது பழைய நாகரிகம் மாறிவிட்டதென்பதை