பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கண்டறியாதன கண்டேன்

உணர்ந்தேன், பெண்கள் மேல்நாட்டுப் பாணியில் உடை யணிந்து உலவினர்கள். ஆடவர்களும் அப்படியே. சில ஆடவர்கள் பழைய முறைப்படி தலையை மறைக்கும் நெடும் சட்டையை அணிந்து தலைமேல் இரண்டு கறுப்பு வளையங் களை வைத்துக்கொள்கிருர்கள். தகல உடை கழுவாமல் இருக்க அந்த வளையங்கள் உதவுமென்று எண்ணுகிறேன். ஒருகால் காட்டின் உள்ளே சென்ருல் பழைய நாகரிகத்தை விடாத பெண்களும் இருக்கலாம்.

விமானப் பயணத்தில் ஒரே நாளில் பல வகையான காகரிகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சினிமாக் கொட்டகையில் அமர்ந்து திரையில் ஒடும் பல காட்சிகளைக் காண்பது போலவே பிரமை தட்டுகிறது. அங்கே திரையில் காட்சிகள் ஒடுகின்றன. இங்கே விமானம் நம்மைச் சுமந்துகொண்டு ஒடுகிறது.

சிறிறு நேரம் துபாயில் தங்கிப் பிறகு விமானம் .புறப்பட்டது. அராபியாவை விட்டு இந்தியாவை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது விமானம். இரவு நேரமாகையால் வெளியில் ஒன்றும் தெரியவில்லை. எங்கோ முணுக்கு முனுக்கென்று வெளிச்சங்கள் தெரிந்தன. அந்த இருட்டில் எதைத் தெரிந்துகொள்ள முடியும்? .

விடியற்கால 4-50க்குப் பம்பாய் வந்து சேர்ந்தோம். என் கடிகார மணி 1-15. இந்தியாவின் மணிக்குத் திருப்பிக்கொண்டேன். - - -

விமான கிலேயத்தில் இறங்கினேம். எங்கள் பண்டங் களைச் சுங்க கிலேயத்துக்கு எடுத்துச் சென்ருர்கள். மற்ற இடங்களில் சுங்க அதிகாரிகள் பயணிகள் கடத்தும் முறைக்கும் இந்தியாவில் கடத்தும் முறைக்கும் எவ்வளவு வேறுபாடு அங்கெல்லாம் மனிதாபிமானத்துடனும் மரியா தையுடனும் நடத்துகிருர்கள் இங்கேயோ குற்றவாளி

களப் போல கடத்துகிருர்கள். அக்கு வேறு ஆணிவேருகப்