பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் திரும்பினேன் 329.

பெட்டி யையும் படுக்கையையும் பிரித்துச் சோதனை போடு கிருர்கள். வருகிறவர்கள். ‘ஏண்டா இங்கே வந்து அகப் பட்டுக்கொண்டோம்!' என்று எண்ணும்படி செய்துவிடு கிரு.ர்கள்.

மனித சமுதாயத்தில் தவறு செய்கிறவர்கள் இருக்கத் தான் இருக்கிருர்கள். அவர்களைக் கண்டுபிடித்து உரிய தண்டனை கொடுக்கத்தான் வேண்டும். குற்றவாளிகளுக் காக ஒதுக்குப்புறமாகச் சில சிறைகள் இருக்க வேண்டுவது அவசியந்தான். ஆனால் ஊர் புழுவதையுமே சிறைச்சாலை யாக்கிவிட்டால் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியுமா?

உலகம் சுற்றப் போகிறவர்கள் உல்லாசமாகப் பயணம் செய்கிருர்கள். அவர்கள் மனத்துக்கு மகிழ்ச்சியை ஊட். டும் வகையில் உதவி செய்தால் அவர்கள் கம்மைப் பாராட்டு வார்கள். அதை விட்டுவிட்டு. வருகிற பிரயாணிகள் எல் லோரும் திருடர்கள், குற்றவாளிகள் என்று நினைத்துக் கொண்டு எல்லோரையும் சகட்டுமேனிச்குச் சந்தியில் நிறுத் திச் சோதனை போட்டால் வருகிறவர்கள் மனம் மகிழுமா? மறுபடியும் வரத் தோன்றுமா?

நல்ல வேளை! எங்களுக்கு ஒரு துன்பமும் இல்லை. நான் வாங்கி வந்த டிரான்ஸிஸ்டரைக் காட்டினேன். அதற்கு அல்சென்சு வாங்க உதவியாகச் சுங்க அதிகாரி ஒரு குறிப் பைக் கொடுத்தார். வேறு பல பிரயாணிகள் அங்கே பட்ட அவஸ்தையைப் பார்த்தபோதுதான் பரிதாபமாக இருந்தது.

ஏர் இந்தியாக்காரர்கள் எங்களைப் பம்பாயில் ஒரு. ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த ஹோட்டல்காரர்கள் எங்களுக்கு வழங்கிய ஆரஞ்சு ரசம் ஒரு தம்ளர் விலை ரூ.9. "நாம் இன்னும் மேல் நாட்டில்தான் இருக்கிருேமோ?' என்ற மயக்கம் எனக்கு உண்டாயிற்று: எங்கள் உணவுக்குப் பில் ரூ. 43 ஆயிற்று. ஏர் இந்தியாக் காரர்கள் 24 ரூபாய்தான் தருவார்களென்றும் பாக்கிப்