பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கண்டறியாதன கண்டேன்

களில் சில சமயங்களில் பெண்களின் பசி மிக்கிருப்பதையும் கண்டேன்.

ஒப்பனை செய்துகொள்வதில் பாரிஸ் நகர மக்கள் முதன்மையானவர்கள். இல்லங்களே அழகாக வைத்திருப் பதிலும் அவர்கள் சிறந்தவர்கள். எங்கே பார்த்தாலும் சிற்ப எழில் வெள்ளம் வழிந்தோடுகிறது. எல்லாம் பிரம்மாண்டமான வடிவங்கள்.

ஒருவருக்கொருவர் மரியாதை தருவதிலும், உதவிபுரிய முன்வருவதிலும் பொதுவாக மேலே காட்டார் பாராட்டம் குரியவர்கள். நான் வேட்டியை அணிந்து நடந்தேன். என்னை ஓரக் கண்ணுல் சிலர் பார்த்திருக்கலாம். ஆனல் விழித்துப் பார்த்துச் சிரிக்கவில்லை. தம் பண்பாட்டைக் காப்பாற்றுபவர்களிடம் அவர்கள் மதிப்பு வைத்தே பழகுகிருர்கள்.

ஆப்பிரிக்காவில் பல நாடுகள் பிரெஞ்சுக் குடியேற்ற காடுகளாக இருந்தன. ஆதலால் அங்கிருந்து ஆப்பிரிக்க நீக்ரோக்கள் பலர் பாரிஸ் மாநகரில் வந்து வாழ்கிருர்கள். வீதியில் நடக்கும்போது இருபது பேருக்கு ஒருவராவது நீக்ரோவாக இருப்பார். அவர்கள் மற்றவர்களோடு இயல்பாகப் பழகுகிருர்கள். எழில் ததும்பும் வெண்மேனிப் பிரெஞ்சு நங்கையும், தலைக் கேசத்துக்கும் திருமேனி வண்ணத்துக்கும் வேறுபாடு தெரியாத ஆப்பிரிக்க மைந்தனும் கைகோத்து உல்லாசமாக நடப்பதைப் பாரிஸ் தெருவிலே காணலாம். அப்படிப் போகும் இணையை யாரும் வெறித்து நோக்குவதில்லை.

நாங்கள் போயிருந்த சமயம் மேல்நாடு முழுவதும் வேனிற்காலம்; ஒய்வு நாள். ஐரோப்பாவில் உள்ள பிற காட்டு மக்களும் அமெரிக்கர்களும் ஏராளமாக விடு முறையை உல்லாசமாகக் கழிப்பதற்காகப் பாரிஸுக்கு ாந்திருந்தார்கள். எங்கே பார்த்தாலும் ரோடுகளில் கார்