பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.30 கண்டறியாதன கண்டேன்

கலப்படமில்லாமல் சுத்தமாகப் பாலிதீன் பைகளில் போட்டு வைத்திருக்கிருர்கள். கீரை வகைகள், காய்கறிகள் கடைகளில் கிடைக்கின்றன. நல்ல ருசியான முருங்கைக் காய் கிடைக்கிறது என்ருல் மற்றவற்றைப்பற்றிச்

சொல்வானேன்? ..

உணவு உண்ட பிறகு ஏதேனும் ஒர் இடத்தைப் பார்க்கலாம் என்ற அவா உண்டாயிற்று. அன்பர் திரு சா. கணேசனுக்கு மியூஸியம், நூல் கிலேயம் ஆகியவற்றைப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். 'இன்று லூவர் மியூஸியம் பார்க்கலாம்' என்ருர், அப்படியே அங்கே சென்ருேம்.

பாரிஸ் மாநகரின் நடுவில் ளின் என்னும் ஆற்றங் கரையில் லூவர் அரண்மனையும் லூவர் மியூளியமும் இருக்கின்றன. அந்த நகர த் தி ல் எத்தனையோ மியூஸியங்கள் உண்டு. எல்லாவற்றையும் பார்க்க வேண்டு மால்ை மாதக் கணக்காகத் தங்கவேண்டும். பார்த்த வரைக்கும் லாபம் என்று சிலவற்றைப் பார்த்தோம். முதலில் பார்த்தது லூவர் மியூஸியம். ஸான் ஜர்மேன் ல் -ApGrr (Church of St. Germain-l'Auxerrois) gróðrguib ஆலயமும், லூவர் அரண்மனையும் இந்தப் பகுதியில் இரண்டு பக்கமும் காட்சி அளிக்கின்றன. -

லூவர் மியூஸியம் உலகில் உள்ள பெரிய காட்சிச் சாலை களில் ஒன்று. 16-ஆம் நூற்ருண்டில் ஆண்டிருந்த முதலாம் பிரான்சிஸ் மன்னன் கிfளிலிருந்தும் ரோமாபுரியிலிருந்தும் பல அரிய அழகுப் பொருள்களேயும் பன்னிரண்டு ஓவியங் களையும் கொண்டு வந்தான். பின்னே வந்த பதின் முன்ருவது லூயி அரசன் காலத்தில், அதாவது 17-ஆம் நூறருணடில நூறு ஓவியங்கள் இங்கே இருந்தன. பின் வநத மன்னர்கள் பல ஒவியங்களைத் தொகுத்து வைத்தார்கள். இப்போது கிட்டத்தட்ட இரண்டு லட்சம் காட்சிப் பொருள்கள் இந்த மியூளியத்தில் இருக்கின்றன.