பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கண்டறியாதன கண்டேன்

இருக்கிறது. சிற்பங்கள் ஒரு புறம், கலைப்பண்டங்களும் பழகு கருவிகளும் ஒருபால், ஒவியங்கள் ஒரு பால்-இப்படி ஒன்பது வேறு பகுதிகளாக இங்குள்ள அரிய பொருள் களைப் பகுத்துத் தனித்தனியே வைத்துப் பாதுகாக் கிருர்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்ப்பதற்குள் தாவு: தீர்ந்துவிடும். இதை அறிந்தே அங்கங்கே உட்கார்ந்து இளைப்பாற வசதி செய்திருக்கிருர்கள்.

பல நாட்டு விக்கிரகங்கள், சிற்பங்கள், ஆயுதங்கள், கம்பளங்கள், ஆபரணங்கள், கல்வெட்டுக்கள் முதலிய வற்றை அங்கே கண்டேன். ஒரே கல்லாலான கோயில் களைப் பெயர்த்துக்கொண்டு வந்து வைத்திருக்கிருர்கள். நவரத்தினங்களாலான அணிகலன்கள் ஒரிடத்தில் உள்ளன. 37 காரட்டுள்ள வைரம் ஒன்றைப் பார்த்தேன். அது இந்தியாவிலுள்ள கோல்கொண்டாவிலிருந்து சென்ற மணி என்பதை அறிந்தபோது பெருமூச்சு விட்டேன். "இங்கேயாவது இதைப் பாதுகாத்து வைத்திருக்கிருர்கள். நம் நாட்டில் இருந்தால் இது எத்தனை துண்டுகளாகச் சிதறியிருக்குமோ? என்ற எண்ணம் பிறகு தோன்றியது.

ஒவியங்களில்தான் எத்தனை அற்புதம்! டா விஞ்ச்சி யின் உலகப் புகழ் பெற்ற ஓவியமாகிய மோன லிஸா இந்தக் காட்சிச்சாலையின் பெருமையை மிகுதியாக்குகிறது. வான் டைக் முதலிய ஓவிய மேதைகளின் விலை மதிப்பற்ற ஒவியங்களும் இங்கே உள்ளன.

எதைப் பார்ப்பது? எதை விடுவது?-இது பெரிய சிக்கல். பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்தன; நடந்து கடந்து கால்கள் கடுத்தன. கடல் கண்டோ மென்பர் யாவரே முடிவுறக் காண்பார்?' இருக்குமிடத்துக்குத் திரும்பும்படி கால்கள் கெஞ்சின. டாக்ஸியில் ஏறி ஹோட்டலே வந்து அடைந்தோம். டாக்ஸி வாடகையைக் கண்டு மலைத்தோம்! இதில் டாக்ளிக்காரனுக்கு 'டிப்ஸ்’ வேறே நம் ஊரில் சிறிது தூரத்துக்கெல்லாம் டாக்ளியில்