பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“g s..."

4 முற்பகலும் பிற்பகலும்

உலகத் தமிழ் மாகாடு தொடங்குவதற்கு முன்பே எங்களுடைய பயணத்தை ஒழுங்கு செய்துகொண்டால், அப்பால் கவலை இல்லாமல் இருக்கும் என்று கினைத்தேன். நானும் அன்பர் திரு சா. கணேசனும் ஒன்ருகவே பயணம் செய்வது என்று தீர்மானித்தோம். பாரிஸிலிருந்து லண்டன் போய்ப் பிறகு பிராங்க்பர்ட் முதலிய இடங் களுக்குப் போக வேண்டும். எங்களுக்கு லண்டன் போக அநுமதி வேண்டும். சென்னையில் ஏற்பாடு செய் திருக்கலாம். அது முடியாமல் போயிற்று. பாரிஸில் இந்தியத் தூதுவராலயத்தில் உள்ள அன்பர் திரு ஐயர் மூலமாக லண்டனுக்குள் புகும் அநுமதியை (Entry Permit)ப் பெற்றுவிடலாம் என்று தெரிந்தது. ஆனல் எங்களிடம் இருந்த விமான டிக்கட் சென்னையிலிருந்து பாரிஸ் போய்த் திரும்பச் சென்னைக்கு வருவதற்குத்தான் செல்லும். இடையில் உள்ள நகரங்களில் தங்கிப் பார்க்கலாம். பாரிஸி லிருந்து லண்டனுக்குப் போகக் கூடுதலாகப் பணம் செலுத்தி எங்களிடம் இருந்த விமானப் பயணச் சிட்டை நீட்டிக்க வேண்டும்.

'ஏர் இந்தியா அலுவலகம் சென்று எல்லாவற்றையும் விசாரித்துக் கொள்ளலாம்; அதோடு நம் கையில் உள்ள Lusoffsafér &morrèugou (Travellers', Cheque) வேண்டிய அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் கினைத்தோம்.

13-ஆம் தேதி (ஜூல) அன்று வழக்கம் போல் ஐந்து மணிக்கே எழுந்திருந்தேன். ரோட்டு முதலியவற்றை