பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகலும் பிற்பகலும் 3漫... முடித்துக் கொண்டு, எழுத வேண்டிய கடிதங்களை எழுதினேன். 8 மணிக்குத் தம் அறையிலிருந்து டாண் என்று அன்பர் கணேசன் வந்து கின்ருர். இருவரும் ஹோட்டலில் காலைச் சிற்றுண்டி உண்டோம். வறட்டு ரொட்டி ஒன்று. மெதுவான ரொட்டிகள். பழப்பாகு (Jam), வெண்ணெய், பால் இவையே காலையில் நான் உண்ட உணவு. நீளமான ரொட்டியைப் பாரிஸில் எல்லோரும் விரும்பி உண்ணுகிருர்கள். ஒரடி இரண்டடி நீளத்தில் கூடக் கடைகளில் அதை விற்கிருர்கள். நம் ஊரில் விழாக் காலங்களில் ஜனங்கள் கையில் கரும்பை ஆளுக்கு ஒன்ருக எடுத்துச்செல்வதுபோல அங்கே எடுத்துப் போகிருர்கள். அங்கங்கே அதைக் கடித்துத் தின்கிருர்கள்; வீதியிலேதான். மனித இயல்புகள் பல எங்கும் ஒரு மாதிரியே இருக்கின்றன. -

காங்கள் தங்கியிருந்த டாக்மார் விடுதியில் ஒரு காங்கோ நீக்ரோ ஊழியர் இருந்தார். அவரே எங்களுக்குச் சிற்றுண்டியை வழங்கினர். அவருக்கு வெள்ளேயர்களிடம் தான் அதிக மதிப்பு. கறுப்பர்களிடம் அவ்வளவு மதிப் பில்லை. அவருக்கு-அவனுக்கு என்று சொல்வேன்; ஆனால், அது மரியாதை அன்று அல்லவா?. ஆங்கிலம் தெரியாது. பிரெஞ்சு மொழிதான் பேசுவார். பிரெஞ்சு மொழி சிலரிட மிருந்து வரும்போது இனிமையாக இருக்கிறது. வேறு சிலரிடமிருந்து வரும்போது கடுமையாக இருக்கிறது. தமிழ் மட்டும் என்ன? தமிழ் என்பதற்கே இனிமை என்பது பொருள் என்று சொல்கிருர்கள். ஆனல் பல பேர் மேடை மீது ஏறித் தமிழ் பேசும்பொழுது தமிழ் இனிமையாகவா இருக்கிறது? டாக்மார் ஹோட்டலில் பணி செய்யும் “மடையர் பேச்சைக் கொண்டு பிரெஞ்சு மொழியின் இனிமையை நிறுப்பது நியாயம் அன்று. ஏனென்ருல் அவ்ர் வெள்ளை நிறத்துக்கு மதிப்புக் கொடுத்துப் பேசும்போது அவர் குரலும் மொழியும் இனிமையாகவே இருந்தன்; எங்களைப் போன்றவர்களிடம் அது எப்ப்டித்த்ான் மாறுகிறதோ, தெரியவில்லை. காவல் விலங்கின் குர்லக்