பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கண்டறியாதன கண்டேன் தான் நாங்கள் நினைத்துக்கொண்டோம். நல்ல. കേുrt அந்த ஹோட்டலில் வரவேற்கும் பணியைச் செய்த பெண்

மணி இதற்கு நேர்மாருக இருந்தாள்: இனிமையாகவும்

மரியாதையாகவும் பேசிள்ை. அவளுக்கு ஆங்கிலமும்

தெரிந்தது. அவள் பேச்சை மாத்திரம் கேட்டவர்களுக்குப் பிரெஞ்சு மொழியில் காதலே உண்டாகிவிடும். -

சிறிது கூட்டம் வந்துவிட்டால் காங்கோப் பணி யாளுக்கு உண்டாகும் வேகம் பார்த்துப் பிரமிக்கக் கூடியது; பம்பரம் போலச் சுற்றுவார். அதை நாம் பாராட்டத்தான் வேண்டும். அந்த வேகத்தில் நாம் அவர் கண்ணில் பட்டால் "சள்’ என்று எதையோ சொல்வார். நாம் ஒதுங்கிக்கொண்டு சிறிது காத்திருக்க வேண்டும். காத்திருந்தால் என்ன? இட்டிலியா குடு ஆறிப்போக: ரொட்டிதானே? சிறிது நேரம் கழித்து உண்டால் குடியா முழுகிப்போய்விடும்?

முன்காலத்தில் நம்முடைய காட்டிலேயே நம்மவர்கள் வெள்ளைத் தோலுக்கு மதிப்பும் கறுப்புத் தோலுக்கு, அவமதிப்பும் அளித்ததைக் கண்டிருக்கிருேமே! இதில் வேடிக்கை என்னவென்ருல்,பிரெஞ்சுக்காரர்கள் சிறிதளவும். இந்த நிறவேற்றுமையைக் கவனிப்பதில்லை. அவர்களுக்கு. எல்லோரும் சமம். பிரெஞ்சு மாதர்கள் பிரெஞ்சுக் காரர்களைக் காதலித்துத் தழுவுவதைப் போலவே நீக்ரோக். களையும் காதலிக்கிருர்கள். ஆனல் இந்தக் காங்கோக் காரருக்குத்தான் தம் நிறத்தை மற்றவர்களிடம் கண்டால் பிடிக்கிறதில்லை. விசித்திரத்திலும் விசித்திரம்!

கால நேரத்தில் இனிய பாலை உண்டாலே மனம் மகிழ்கிறது. பழப் பாகும் ரொட்டியும் ஏற்ற இணைப்பு: சட்டினியும் இட்டிலியும் போலே. ஆனல் அங்கே வந்த வர்கள் பெரும்பாலும் மதுவைச் சுவைத்துச் சுவைத்து அருந்தினர்கள். ஷாம்பேன் என்னும் மது அங்கே தண்ணிர் பட்ட பாடு. ஆம், நாங்கள் தண்ணிர் கேட்டு. வாங்கிக் குடித்தோம். மற்றவர்கள் தண்ணிருக்குப் பதிலாக