பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁 கண்டறியாதன கண்டேன்

என்ருள் இந்தப் பெண்மணி. இருவர் சொன்னதையும் கூட்டி இரண்டால் வகுத்து 33; டாலரைக் கொடுக்கலாமா?" என்று யோசித்தேன். அநுமதிச் சீட்டு வாங்கின. பிறகு தானே டிக்கெட்டை நீட்டிக்க வேண்டும்? ஆகவே இப் போதே இந்தச் சர்ச்சையில் இறங்க வேண்டாமென்று, அங்கே இருந்த இந்தியப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்க்க உட்கார்ந்தேன். எல்லாம் ஒரு வாரத்துக்கு முற்பட்டவை. எழுந்தவுடன் சுடச்சுடப் பத்திரிகை பார்க்கும் பழக்க முள்ள எனக்கு அந்தப் பழம் பத்திரிகைகள் செய்தித் தாள்களாகத் தோன்றவில்லை; வெறும் காகிதமாகவே. தோன்றின. அன்பர் திரு சா. கணேசனும், திரு கருத் திருமனும் கானும் அங்கிருந்து புறப்பட்டோம். -

எங்களுக்குக் கையிலுள்ள காசோலையை மாற்ற வேண்டியிருந்தது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற கிறுவனத்துக்குச் சென்ருேம். அங்கே என்ன கூட்டம்: பயணச் சீட்டுகள் வழங்குவது, நாணயங்களே மாற்றித் தருவது புத்தகங்களே விற்பது, தபால்களைப் பட்டு வாடாச் செய்வது என்று இப்படி எத்தனையோ வகையான வேலைகளை அங்கே செய்கிருர்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வேறு நாடுகளுக்குப் போவதற்குரிய வழிகளைச் சொல்லுகிருர்கள். பல காடுகளைப் பற்றிய செய்திகளேத் தெரிவிக்கும் அறிக்கைகளையும் படங். களோடுள்ள சிறிய புத்தகங்களையும் அங்கே வைத் திருக்கிருர்கள். -

வெவ்வேறு தளங்களுக்கு ஏறவும் இறங்கவும் இயங்கும் படிகளை (Escalator) வைத்திருக்கிருர்கள். அமைதி யாகவும் ஒழுங்காகவும் அவரவர்கள் தங்கள் காரியத்தைக் கவனித்துக் கொண்டு போகிருர்கள்.

காங்கள் 'பாங்க் இருக்கும் இடம் சென்று எங்களுக்கு வேண்டிய அளவுக்கு எங்கள் கையில் இருந்த காண யத்தைப் பிரெஞ்சு நாணயமாகிய பிராங்குகளாக மாற்றிக்