பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகலும் பிற்பகலும் 39

கொண்டோம்: பாஸ்போர்ட்டைக் காட்டினல் போதும்; உடனே வேண்டியதைக் கொடுத்துவிடுகிருர்கள்.

அன்பர் திரு கருத்திருமன் மாற்றும்போது அங்கிருந்த பெண் மணி கூடுதலாகப் பிராங்குகளைக் கொடுத்து விட்டாள். அதை எண்ணிப் பார்த்தபோது அதிகமாக இருப்பதைக் கண்டு அன்பர் 'மதாம், இது கூடுதலாக இருக்கிறதே!' என்று சொல்லி அதிகமாக இருந்ததைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். அதைக் கண்டு அந்தப் பெண் மலர்ந்த விழியுடன், 'நன்றி!' என்ருள். "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?' என்றும் கேட்டாள். அப்போது எங்களுக்குத் தலை சிறிது கிமிர்ந்தது. "இந்தியர்கள் நல்லவர்கள்' என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டார் அன்பர் என்ற நினைவிலே பெருமிதம் உண்டாயிற்று ஆல்ை-? அதை இப்போதே சொல் வானேன்? சொல்லும் இடத்தில் சொல்லுகிறேன்.

அமெரிக்கன் எக்ஸ்பிரெஸ்ஸிலிருந்து காலேஜ்-தபிரான்ஸ் என்ற இடம் சென்ருேம். அங்கேதான் உலகத் தமிழ் மாநாடு கூட இருந்தது. அது ஒரு கல்லூரி. அதன் புறத்தே ஒரு பேராசிரியரின் சில கின்றது. உள்ளே முற்றத்திலும் வேறு ஒரு பேராசிரியரின் உருவச்சிலை ஒரு காலே அறியாமை என்னும் அசுரன் தலையிலே வைத்து மிதித்துக்கொண்டு நிற்பது போன்ற கோலத்தில் இருந்தது. கம்பி அழிகளினூடே ஒரு திட்டிவாசல் வழியே உள் நுழைந்தால் முற்றம் இருக்கிறது. அங்கேதான் இரண்டாவது சில இருந்தது. திட்டி வாசலின் அருகில் புறத்தே இரண்டு அட்டைகள் தொங்கின. ஒன்று பிரெஞ்சு மொழியில் இருந்தது. மற்ருென்று தமிழில் இருந்தது: "மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கூடல்' என்று அந்த அட்டை அறிவித்தது. .

உள்ளே சென்ருேம். ஓர் அறையில் சில மாணவர்கள் அமர்ந்து ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள். அவர் களைப் பார்த்தபோதே அவர்கள் தமிழர்கள் என்பதைத்