பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - கண்டறியாதன கண்ட்ேன்

தெரிந்து கொண்டோம். தமிழ்நாட்டு மாணவர்களும் யாழ்ப்பாணத்து மாணவர்களும் அங்கே இருந்தார்கள். பிரான்சில் வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அவர்கள். லண்டனில் படிப்பவர்கள் இருவரும் அங்கே வந்திருந்தார்கள். உலகத் தமிழ் மகா காட்டுக்கு வந்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரித்துத் தனித்தனியே வைத்துக்கொண்டும், வேறு வேலைகளைக் கவனித்துக்கொண்டும் இருந்தார்கள்.

அவர்கள் எங்களேக் கண்டவுடன் புன்முறுவலுடன் வரவேற்ருர்கள். எங்களை இன்னர் என்று தெரிந்து கொண்டு, எங்களுடைய வசதிகளைப்பற்றிக் கேட்டார்கள். மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் எங்கெங்கே தங்கியிருக்கிருர்கள் என்று விசாரித்தோம். உலக மாணவர்கள் தங்குவதற்குரிய இல்லங்கள் அமைந்த *விதே யுனிவர்ளிதே' என்ற இடத்தில் பலர் தங்கி யுள்ளனர் என்று கூறினர். தமிழ் காட்டுத் தொல் பொருள் துறை இயக்குள் திரு நாகசாமி அவர்களேப் பார்க்க விரும்பினேம். அவரும் அவ்விடத்தில் இருப்பதை அறிந்து, 'எப்படி அங்கே போவது?" என்று கேட்டோம். அங்கிருந்த மாணவர்களில் ஒருவராகிய திரு ஜமாலுதீன் என்பவர், 'நானே வருகிறேன்' என்று மற்ருெரு மாணவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். அவருடைய சுறுசுறுப்பையும் உதவி செய்யும் மனப் பான்மையையும் தமிழன்பையும் கண்டு வியந்தேன். மதுரையிலிருந்து வந்து உடற்பயிற்சி சம்பந்தமான சில துணுக்கங்களைப் பயில்கிறவர் அவர்.

காலேஜ்-த-பிரான்ஸிலிருந்து கடந்து சென்ருேம். பாரிஸில் பாதாள ரெயில் ஒடுகிறது. அதில் உள்ள ரெயில் நிலையங்களை மெத்ரோ என்று சொல்கிருர்கள். மிகவும் அழகான ரெயில் கிலேயங்கள். வேகமான மின்சார தெயில்கள். நாங்கள் லக்ஸ்ம்பர்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ரெயில் ஏறிளுேம். பாரிஸ் நகரில் நாங்கள் தங்கிய