பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகலும் பிற்பகலும் 4}

பத்து நாட்களில் இந்த லக்ஸம்பர்க் எங்களுக்கு மிகவும் பழக்கமாகிவிட்டது. நேரே Rதே யுனிவர்ஸிதே என்ற ஸ்டேஷனில் இறங்கி மாணவர் இல்லங்கள் உள்ள இடத்துக்குச் சென்ருேம். பல்கலைக் கழக மாணவர்கள் ஐயாயிரம் பேருக்கு மேல் அங்கே தங்கியிருக்கிருர்கள். ஒவ்வொரு காட்டின் பெயராலும் அங்கே தனித்தனி இல்லங்கள் இருக்கின்றன. அந்த அந்த காட்டின் அரசினர் தந்த பொருளைக் கொண்டு கட்டிய இல்லங்கள் அவை. பிரான்சு அரசினருடைய உதவியும் ஒரளவு இருக்கலாம். அந்த அந்த நாட்டு இல்லத்தில் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் அந்த அந்த நாட்டு மாணவர்கள் இருக்கிரு.ர்கள். அவர்களோடும் மற்ற நாட்டு மாணவர்களும் வசிக்கிருர்கள். இந்த முறையில் இந்திய மாணவர் இல்லத்தில் மாளுக்கர்கள் தங்கியிருக்கிருர்கள். இங்கே உள்ள மாணவர்களுக்கு 300 பிராங்கு முதல் 500 வரை உதவிப் பொருள் வழங்குகிருர்களாம். இங்கே உணவுச் சாலை இருக்கிறது. அங்கே ஒரு சாப்பாடு 5 பிராங்க்: மாணவர் களுக்கு 120 பிராங்குக்கு வழங்குகிருர்கள்.

உலகத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் இல்லங்கள் அங்கே இருக்கின்றன. சீன இல்லம் மட்டும் இல்லை. அங்குள்ள உணவுச் சாலையில் உணவு கொள்ளச் சென்ருேம். அவரவர்கள் ஒவ்வொரு தட்டை எடுத்துக் கொண்டு அங்கங்கே உள்ள பண்டங்களில் வேண்டியதை வாங்கி வைத்துக் கொண்டு சென்று நாற்காலிகளில் அமர்ந்து உண்ணுகிருர்கள். நல்ல அரிசிச்சாதம், பயற்றஞ் சுண்டல், அருமையான தயிர்க் கட்டி, முட்டகோஸ் கறி, ரொட்டி, பால் ஆகியவற்றை வாங்கி உண்டேன். அந்த உணவு முழுவதையும் சாப்பிட முடியவில்லை. வயிறு திம்மென்று ஆகிவிட்டது. காகிதக் குப்பியில் கொடுத்த இனிய பால்' 4 தம்ளர் இருக்கும். அதைக் குடித்தாலே வயிறு கிரம்பிவிடும். பாதிக்கு மேல் மிச்சம் வைத்து விட்டேன். - . . .