பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகலும் பிற்பகலும் 43;

மிகப் பெரியது. பாலத்தில் எங்கும் கலை வடிவங்கள். சில: இடங்களில் பாதாள ரெயில் nன் நதிக்குக் கீழே: போகிறது.

'இதுதான் பிகால் என்ற இடம். இது மிகவும் புகழ். பெற்ற பகுதி" என்ருர் உடன் வந்த மாணுக்கர்.

§

"எப்படிப் புகழ் பெற்றது?’ என்று கேட்டேன்.

அவர் சிரித்துக்கொண்டார். "அதோ பாருங்கள்' என்ருர். அங்கே ஒவ்வொரு வாயிலிலும் ஒவ்வொரு பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு கின்ருள். கையில் ஒரு. பையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வழிமேல் விழி . வைத்தபடி மான் போலவும் மயில் போலவும் கின்று. கொண்டிருந்தார்கள்.

"இங்கே என்ன விசேஷம்?'

"இந்தப் பெண்கள் பூலோகத்தில் சொர்க்க இன்பத்தைத் தருகிறவர்கள். உடல் பொருள் ஆவி மூன்றில் நீங்கள் பொருளைக் கொடுத்தால் இவர்கள் உடலை வழங்குவார்கள், யாரை விரும்புகிறீர்களோ அவள் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு ஏதேனும் ஹோட்டலுக்குப் போக வேண்டியதுதான்..." மேலே அவர் பேசவில்லை. நாங்கள் தெரிந்து கொண்டோம். ஆம்; அது "பழிபடு போகம் விற்பார் ஆவணம்" என்பதை உணர்ந்தோம். பாரிஸ் மாநகர் அதற்குப் பெயர் போனதென்பது உலகம் அறிந்த செய்திதானே? X

"சரி, சரி, வேறு எங்காவது போகலாம்' என்று சொன்ைேம்.

அப்போது அன்பர் திரு கருத்திருமன், "எங்காவது மருந்துக் கடை இருந்தால் சொல்லுங்கள். போய் ஒரு. மருந்து வாங்கவேண்டும்' என்ருர். திரு தம்பி ஒரு. வீதிக்குக் காரை ஓட்டிச் சென்று கிறுத்தினர். அங்கே ஒரு சிறிய மருந்துக் கடைக்குள் நுழைந்தோம். இரண்டு.