பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கண்டறியாதன கண்டேன்

பக்கம் இருக்கிறது. மேரி மக்தலேனுடைய சிற்பம் ஒரு புறம். வெண்கலத்தாலான ஜோன் ஆப் ஆர்க்கின் உருவம் ஒருபால் கிற்கிறது. திருவாயிற் கதவுகளில் வெண்கலத் தகடுகளில் விவிலிய நூற்சிற்பங்களே அமைத்திருக்கிருர்கள். இங்குள்ள நடுக் கோபுரத்தின் உயரம் 262 அடி. வானளாவ ஓங்கிப் பிரம்மாண்டமாக அது விளங்குகிறது. இங்கே உலகத்தில் மிகப்பெரிய மணிகளுக்குள் ஒன்று இருக்கிறது. அதன் எடை பத்தொன்பது டன்!

நானும் நண்பர்களும் இந்தத் திருக்கோயிலுக்குள்ளே புகுந்தோம். எங்கே பார்த்தாலும் தெய்விகச் சிற்பங்கள், சித்திரங்கள்! நடுவிலே ஒரு கோயில்; அதைச் சுற்றி ஆவரணம் போன்ற அமைப்பு. எ ல் லா வ ற்றையும் கவித்துக்கொண்டு மேலே எழும்பியிருக்கும் கோபுரம்! எங்கும் பளிங்குக் கற்கள்; மொஸைக் வேலைப்பாடு. ஒரே சமயத்தில் ஐயாயி ர ம் பேர்கள் உள்னே இருக்கலாம். நாங்கள் போகும்போது ஓரளவு கூட்டம் இருந்தது. ஆனல் எத்தகைய அமைதி மக்கள் உள்ளே இருப்பது தெரியாமல் கடந்துகொண்டார்கள்: வழுக்கும் இடத்தில் நடப்பது போல மெல்ல கடந்தார்கள். உரக்கப் பேசாமல் இரகசியக் குரலில் பேசினர்கள். ஒரு கூச்சல், ஒரு சத்தம், ஒரு மோதல் உண்டா? எல்லோரும் மெளனமாக நடந்து சென்ருர்கள். வேடிக்கை பார்க்க வந்தவர்களும் பிரார்த்தனை செய்ய வந்தவர்களுமான இரு வகையினர் அங்கே இருந்தார்கள். வேடிக்கை பார்க்க வந்தவர்கன்கூட அங்கிருந்த அமைதியான சூழ்கிலேயில் அடக்கமாகவும் மென்மையாகவும் கடந்தார்கள். குரலை எழுப்பாமல் கிசுகிசு என்று பேசினர்கள். அங்கே தெய்விக அமைதி தவழ்ந்தது. -

பாரிஸின் வீதிகளில் காதல் காட்சிகள், நாணம் என்பதை உதறித் தள்ளிவிட்டுப் பொலியும் பொலிவைப் பார்த்தவர்களுக்கு, இங்கே "இப்படியும் ஒரு தெய்விக அமைதியான இடம் இருக்கிறதா?’ என்ற எண்ணம்