பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போகம், யோகம், வேகம்! ፶፬.

உண்டாகும். நம் காட்டுக்குத்தான் தெய்வம் சொந்தம், கோயில் சொந்தம், மற்ற நாடுகள் வெறும் உலோகாயதக் கொள்கை உடையவை என்ற தப்புக் கணக்குப் போட்டவர் களில் நானும் ஒருவன். ஆளுல் அங்கே போய்ப் பார்த்த போது, 'இறைவன் அருள் அலை வீசாத இடம் உலகத்தில் எங்கும் இல்லை. அவனுடைய அன்பர்கள் இல்லாத நாடே இல்லை என்ற உறுதியான உணர்வு எனக்கு உண்டாயிற்று.

பாரிஸைப்பற்றிய புத்தகம் ஒன்றில் நான் படித்தது. எனக்கு நினைவுக்கு வருகிறது, சார்லஸ் பெகி (Charies ?egay) என்பவர் பாடியிருக்கிரு.ராம்; "பாரிஸ் மாநகரம் உடம்புக்கும் உள்ளத்துக்கும் இன்பம் உதவுகிறது. அந்த நகரத்தில் பாவமான போகத்தை மிகவும் தாரளமாக விற். கிருர்கள்; பிரார்த்தனையும் மிகவும் தாராளமாக கடை பெறுகிறது' என்பதே அது. பாரிஸின் வீதிகளிலும் கடன அரங்குகளிலும் போகக் காட்சியைக் காணுகிருேம். கோயில்களில் அமைதியும் வழிபாடுமுள்ள யோகக் காட்சியைக் காணுகிருேம். -

புனித இதயத் திருக்கோயிலைப் பார்த்துவிட்டுப் போகும்போதுதான் முன்பு சொன்ன மருந்துக் கடைக்குப் போனேம். அங்கே புனிதமில்லாத செயல் நிகழ்ந்தது.

எங்காவது இறங்கி நடந்தால் அங்கே காமிராக்காரர்கள் நம்முன் மண்டியிட்டுப் படம் பிடிப்பதுபோல் காட்டி, எழுந்து வந்து, "படம் எடுக்கட்டுமா?" என்று கேட்கிருர் கள். எந்த இடத்துக்கு போனலும் இந்தக் காமிராக்காரர் 'கள் விடுவதில்லை. அதுவும், காட்சிக்குரிய கட்டிடங்களையும் இடங்களையும் பார்க்கப் போனல் அங்கெல்லாம் இந்த ஆசாமிகள் காமிராவைத் துரக்கிக்கொண்டு வந்துவிடுகிருர் கள்; பல முறை நச்சுகிருர்கள். இராமேசுவரம் முதலிய இடங்களுக்குப் போனல் சில பேர்கள். கோயில்களுக்கு அழைத்துச் சென்று எல்லாம் காட்டுகிறேன் என்று நச்சுப் பண்ணுவார்களே, அவர்களுடைய கினைவுதான் எனக்கு வந்தது, -