பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 கண்டறியாதன கண்டேன்

கடனமாடுவார்கள்: இரவு முழுவதும் ஆடிப் பாடிக் கூடிக் களிப்பார்கள்.

சுதந்தரத் திருகாளின் பேரணிக் காட்சியைக் காண அதுமதிச் சீட்டு உண்டு. தமிழ் மாநாட்டுக்கு வந்தவர் களுக்கு அதை வழங்கினர்கள். நானும் என் நண்பர்களும் அன்று காலையில் எழுந்து காலைக் கடன்களையும் சிற்றுண் டியையும் முடித்துக்கொண்டு எட்டு மணிக்கே அந்த இடத் துக்குப் போய் விட்டோம். வெவ்வேறு அடைப்புகள் இருந்தன. படைகள் பவனி வரும் சாலைக்கு இருமருங் கிலும் இரும்பு வேலிகள் இருந்தன. ஒரு பக்கத்திற்கு அருகில் காங்கள் சென்று கின்று கொண்டோம். கூட்டமான கூட்டம்: கோடை விடுமுறைக் காலமாகையால் வேறு காடுகளிலிருந்து பாரிஸுக்கு வந்திருந்த மக்களும் ஏராளம். ஆணும் பெண்ணும் குழந்தைகளும் முதியவர்களும் கெரிக் தார்கள். - -

டெல்லியில் சுதந்தர தின விழா ஊர்வலங்களே நான் பார்த்திருக்கிறேன். அங்கே ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த அந்தப் பகுதிக்கே உரிய கலைகளைக் காட்டும் வண்டி கன் செல்லும். அதன்மேல் நடனமாடும் மங்கையரும் மைந்தரும் கோலம் புனைந்து கிற்பார்கள். கலைப்பகுதியே மிகுதியாக இருக்கும். ராணுவப் பேரணியும் இருக்கும். படைகள் பவனி வரும்.

ஆனல் பாரிஸில் நாங்கள் கலப்பவனியைப் பார்க்க வில்லை. அங்கேதான் எப்போதும் நகரம் முழுவதும் கலை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறதே சரியாக 9-30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. பாண்டு வாத்தியம் முழங்கியது. படைகள் அணி அணியாகப் பவனி வந்தன. எத்தனை விதமான படைக்கல வண்டிகள்! பலபல விதமான டாங்கிகள். பிரம்மாண்டமான வாகனங்களின்மேல் காண்டா மிருகத்தைப்போல ஒரு டாங்கி இருக்கும். அதன் Gఱ3ఖ ஒரு வீரன் வீற்றிருப்பான். சில வண்டிகளில் பிரங்கிகள் இருக்கும். மீண்ட குழாய்களைப்போல வண்டி