பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கண்டறியாதன கண்டேன்

சனும் அப்பாத்துரையாரும் போன இடம் தெரியவில்லை. கானும் அன்பர் கருத்திருமனும் மட்டும் ஒன்ருக இருந்தோம். எங்களுக்கு வழிகாட்ட மற்ருெரு கணேசன் அகப்பட்டார். சிறிது கேரம் மற்ற நண்பர்கள்கண்ணில் தென்படுவார்களா என்று பார்த்தோம்; கிடைக்கவில்லை. அன்பர் கணேசன் வழிகாட்ட காங்கள் புறப்பட்டு விட்டோம்.

அந்த அன்பர் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பொருளா தாரத்தில் ஆராய்ச்சி செய்கிறவர். அதில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி நடத்து கிருர், சென்னேயில் விவேகானந்தர் கல்லூரியில் பொருளாதார விரிவுரையா ளராக இருந்தாராம். அவருக்கு அப்போது கொஞ்சம் பிரெஞ்சு மொழிப் பயிற்சி உண்டாம். இப்போது மாதம் 900 பிராங்கு உபகாரச் சம்பளம் பெற்று ஆராய்ச்சி புரிந்து வருகிருர் தம்முடைய ஆராய்ச்சியின் முடிவில் அவர் ஒரு கட்டுரை எழுதி அளித்து டாக்டர் பட்டம் பெற வேண்டும். 200 பக்கம் அந்தக் கட்டுரையை எழுதினால் போதுமாம். முதலில் ஆங்கிலத்தில் எழுதி அப்பால் பிரெஞ்சு மொழியில் பெயர்த்து எழுதுவாராம். .

அவர் தமிழ்நாட்டில் இருந்தபோது தமிழ்ப் பத்திரி கைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிருர். பாரிஸ் பத்திரி கைகளிலும் பிரெஞ்சு மொழியில் எழுதினராம். 'காந்தி யடிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு இங்குள்ள மக்களுக்கு மிகவும் ஆர்வம். காந்தி நூற்ருண்டு விழாவில் நான் மகாத்மாவைப் பற்றிப் பிரெஞ்சு மொழியில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையை மிகச் சிறப் பாக ஒரு பத்திரிகை வெளியிட்டது. என் படத்தையும் போட்டிருந்தார்கள். அது எனக்குப் பெருமையாக இருந்தத. காந்தியைப் பற்றி எழுதினதால் எனக்கு அந்தப் பெருமை உண்டாயிற்று. என்னேப் பற்றிய அறி முகமும் அதில் வெளியாயிற்று"என்ருர் அன்பர் கணேசன். அவர் விதே யுனிவர்ளிதேயிலுள்ள மாணவர் இல்லங் அளில் கம்போடியா விடுதியில் இருப்பதாகச் சொன்னர். இந்திய விடுதியில் இடம் கிடைக்கவில்லையாம். . X