பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 உலக அரங்கில் தமிழ்

பாரதியாரின் வெண்கலச் சிரிப்புக் கேட்கிறது. 'சபாஷ் சபாஷ் பாண்டியா! உன்னுடைய கனவு பலித்த, தடா!' என்று தம் தோளத் தாமே தட்டிக்கொள்கிருர். உலக அரங்கில் தமிழன்னை அரியணை ஏறி வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டுதான் அவர் இவ்வாறு உவகை அடைகிருர்.

'தேமதுரத் தமிழோசை

உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் "

என்றும்,

" திறமான புலமைஎனின்

வெளிநாட்டோர் அதைவணக்கம் செய்தல் வேண்டும்"

என்றும் அவர் பாடியது இன்று பலித்துவிட்டது. மேல் காட்டில் பிரான்சு தேசத்துத் தலைநகராகிய பாரிஸில் கலைக் கூடங்களும் கல்லூரிகளும் கிரம்பிய லத்தின் வளாகத்தில் உள்ள காலேஜ்-த-பிரான்ஸ் என்னும் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு தொடங்கப்போகும் சமயத்தில்தான் பாரதியார் மறைவில் இருந்தபடியே தம் ஆனந்தக் குரலே எழுப்பினர். அந்தக் குரல் எல்லோருக்கும் கேட்டதோ என்னவோ, எனக்கு. கன்முகக் கேட்டது.