பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கண்டறியாதன கண்டேன்

பிரான்சு நாட்டுக் கல்லூரியாகிய அந்த இடத்தில் 10ஆம் எண்ணுள்ள பெரிய அறையில் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு கூடியாது. நாற்பது நாடுகளி லிருந்து தமிழ் அறிஞர்கள் வந்திருந்தார்கள். ஏறத்தாழ 300 பேர் அமரக்கூடிய அறை இது: பெரிய அறை அல்லது சிறிய ஹால் என்று சொல்லலாம். 1970ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி அங்கே இந்தக் கருத்தரங்கு தொடங்கியது.

பாரிஸ் மாநகரத்தில் தமிழாராய்ச்சியாளர்கள் பலர் பல நாடுகளிலிருந்து வந்து வீற்றிருக்கும் கோலத்தைக் காணும்பொழுது என் உடம்பு புல்லரித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெருமையை நான் அறிந்திருக்கிறேன். இறைவனே எழுந்தருளி வந்து சங்கப் புலவர்களின் முன்னே கின்றபோது அவர்கள் பெருமிதத்துடன் வீற்றி" ருகதாாகள.

'மூவர்கட்கு அரியான் நிற்ப

முத்தமிழ்த் தெய்வச் சங்கப் பாவலர் வீற்றி ருக்கும்

பாண்டிகன் டுை போற்றி ' என்று ஒரு புலவர் சங்கப் புலவர்களின் மிடுக்கை எடுத்துச் சொல்கிருர். எனக்கு அந்தச் சங்கத்தைவிட இந்தக் கருத் தரங்கு சிறந்ததாகத் தோன்றிற்று, அதை நான் பார்த்த தில்லை. அதில் தமிழ் நாட்டுப் புலவர்களே இருந்தார்கள். இதில் உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளிலிருந்து வங் திருந்த தமிழாராய்ச்சிக்காரர்கள் இருந்தார்கள். அதில் இருந்தவர்கள் தமிழுக்கு வரம்பாகியபுலவர்கள், அத்தகைய புலவர்களே இந்தக் கூட்டத்தில் காண முடியாது, ஆலுைம் தமிழ் நாட்டின் வரம்பையும் கடந்து தமிழ் மகளின் அழகையும் அணியையும் கண்டு பணியும் மைந்தர்கள் இங்கே இருந்தார்கள், அந்தச் சங்கத்தில் தமிழின் ஆழம் தெரிந்தது, இந்த அரங்கில் தமிழின் அகலம் தெரிந்தது, கானடாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இங்கிலாங்