பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் தமிழ் 63.

ஆகட்டும். எதைப் பாட வேண்டும் ?' என்று கேட்டேன். -

"யாம் அறிந்த மொழிகளிலே என்பதைப்பாடுங்கள்."

சரி என்று ஒப்புக்கொண்டேன். அவர் வேறு வேலை களைக் கவனிக்கப் போய்விட்டார். அப்போது எனக்கு ஒரு யோசனை உண்டாயிற்று. ' யாமறிந்த மொழிகளிலே " என்ற பாரதியார் பாட்டுத் தமிழின் பெருமையைச் சொல் கிறது. அது தமிழ் வாழ்த்தாக இல்லை. ஏன் நாமே ஒரு புதிய கவியை இப்போது இயற்றிப் பாடக்கூடாது?’ என்று எண்ணினேன். உடனே ஒரு பாட்டையும் எழுதிவிட்டேன். கான் வேகமாக எழுதுவதை அருகில் அமர்ந்திருந்த அன்பர் ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தார். அதை எடுத்துக் கொண்டு சென்று தனிநாயக அடிகளிடம், 'இதைப் பாடலாம் என்று எண்ணுகிறேன்' என்று சொல்லப் புறப் பட்டேன். அருகில் இருந்த அன்பருக்கு என்ன தோன் .மிற்ருே என்னவோ? புறப்பட்ட என்னிட்ம், "இந்தக் கவியை நான் பாடச் சொன்னதாகச் சொல்லுங்கள்" என்ருர். அதிலே ஒரு பெருமையை அடைய வேண்டும் என்பது அவருடைய ஆசை கான் மனத்துக்குள் சிரித்துக் கொண்டேன். நல்ல வேளே! இதை நான் பாடிக் கொடுத்ததாகச் சொல்லுங்கள்' என்று அவர் சொல்லாமல் இருந்தாரே அதுவே பெரிதல்லவா?

தனிநாயக அடிகளிடம் பாட்டைக் காண்பித்தேன்; 'நன்முக இருக்கிறது. பாடுங்கள்' என்று சொல்லி விட்டார். எனக்கு அளவிறந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. உலக அரங்கில் தமிழ் அன்னே ஏற்றம் பெறும் அந்த விழாவின் தொடக்கத்தில் என் குரல் முதல் குரலாக இருக்கப்போகிறது என்ற பெருமிதம் என் உள்ளத்தைக் கிளுகிளுக்க வைத்தது. நானும் மனிதன்தானே?

மேடையின்மேல் தொடக்க விழாவில் பேசுகிறவர்கள் வந்துவிட்டார்கள். யூனெஸ்கோவின் பொது இயக்குநராகப்