பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் தமிழ் 65

சீரதனைக் காண்கின்ருேம்; இன்றிந்தப்

பாரிஸினில் சிறப்பக் கூடி

கேரரிய தமிழாய்வும் தமிழ்முழக்கும்

பரப்புதற்கு கினைந்து வந்தோம்;

ஏருடைய தமிழணங்கின் புகழ்பாடி

மனங்கரைந்தே ஏத்தல் செய்வோம்,'

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு முறையாகக் கருத் தரங்கின் தொடக்க விழா நடைபெற்றது. முதலில் பேராசிரியர் பிலியோஸா வரவேற்ருர், பிறகு டாக்டர் மால்கம் ஆதிசேஷையா முதலில் பிரெஞ்சு மொழியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் பேசினர். அவர் தம்முடைய பேச்சை அச்சிட்டிருந்தார். அவருக்குப் பின் தமிழக முதல்வர் தம் உரையை நிகழ்த்தினர். பிறகு மாண்புமிகு மதியழகன் தம் ஆங்கிலப் பேச்சைப் படித்தார். அப்பால் திரு பிலியோஸா பேசினர். இறுதியில் திரு தனிநாயக அடிகள் இலங்கையிலிருந்து வந்த செய்தியைப் படித்தார். இதனுடன் முதல் நாள் முற்பகல் நிகழ்ச்சி

கிறைவேறியது. ‘. .

பாரிஸில் கடந்த இந்த மாநாடு மூன்ருவது கருத் தரங்கு. இதற்கு "மூன்ரும் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடல்' என்று தமிழில் பெயர் கொடுத்திருந்தார்கள். கருத்தரங்கு கடந்த கல்லூரியின் வாயிலில் பிரெஞ்சு மொழியிலும் தமிழிலும் தனித்தனியே எழுதிய அட்டைகளைத் தொங்க விட்டிருந்தார்கள். தமிழ் அட்டையில் மூன்ரும் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கூடல்' என்ற பெயரே இருந்தது. . -

இதற்கு முன் இரண்டிடங்களில் கருத்தரங்குகள் நடந்தன. ஆதலின் இது மூன்ருவது கருத்தரங்கு முதலில் கோலாலம்பூரில் 1966-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதை உலகத்தமிழ் மாநாடு என்று சொல்லலாம். அதற்குத் தமிழ் சாட்டிலிருந்து பலர் பிரதிநிதிகளாகச் சென்ருர்கள். நானும்

கண்டறி-5