பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கண்ட்றியாதன கண்டேன்

சென்றிருந்தேன். கோலாலம்பூரில் உள்ள பல்கலைக் கழகத்தில் அந்த மாநாடு நடைபெற்றது.

மலேசியாவில் தமிழர் பலர் வாழ்கிருர்கள். அப்போது அமைச்சர் அவையில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருந்தார்கள். தமிழர்கள் வாணிகத் துறையிலும் தொழில் முயற்சியிலும் அரசிலும் ஈடுபட்டுப் பணியாற்றுகிருர்கள். ஆகவே தமிழ் வழங்கும் கிலங்களில் மலேசியாவும் ஒன்று என்றே சொல்ல வேண்டும். மலே மொழி, சீன மொழி, தழிழ் மொழி, ஆங்கிலம் என்ற நான்கும் அங்கே அரசினரின் ஆதரவு பெற்ற மொழிகள். ஆகவே, அங்கே முதல் முதலாகக் கூடிய உலகத்தமிழ் மாகாட்டுக்குத் தமிழ் மக்களின் ஆதரவும் பாராட்டும் கிடைத்தது வியப்பன்று. 1968-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மாநகரில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு ஒரு மாபெரும் விழாவாக கடந்தது. அத்தகைய விழாக்காட்சிகளே முன்பும் பார்த்ததில்லை; பின்பும் பார்க்க இயலாது. தம் புகழின் உச்சகிலையில் இருந்த தமிழக முதல்வர் மாண்புமிகு அண்ணுதுரையவர்கள் முழு மூச்சாக நின்று அந்த விழாப் பல வகையாலும் சிறப்புற நடைபெற ஏற்பாடுகள் செய்தார். உலகத் தமிழறிஞர்கள் வந்தார்கள். கருத் தரங்கைப் பல்கலைக் கழகத்திலும், மக்கள் கலந்து கொண்டு களிக்கும் விழாவைப் பூம்புகார்த் திடலிலும் கடத்தினர்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து விழாவைக் கண்டு களித்தனர்.

சென்னே விழாவைத்தான் உலகத் தமிழ்விழா என்று சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் நடந்த விழா அது. தமிழக அரசே அதை நடத்தியது. ஆதலின் அது மிகப் பெரிய விழாவாக நடைபெற்றதில் வியப்பு இல்லை. -

மூன்ருவது கருத்தரங்குதான் 1970-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்றது. அதைக் கோலாலம்பூரில் கடந்தது போன்ற மாநாடு என்று சொல்ல முடியாது. சென்னையில் நடைபெற்ற தமிழ்ப் பெருவிழாவுக்கும் அதற்கும் ஒப்புமை