பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக அரங்கில் தமிழ் 67

கூற முயல்வதே தவறு. இந்த இரண்டு இடங்களும் தமிழ் மக்கள் வாழும் இடம். பாரிஸ் மாநகரம் அத்தகையது அன்று. பிரான்சு முழுக்க முழுக்க அயல்நாடு. அதன் தலைநகரில் பல்கலைக் கழகத்தில் சில தமிழ்நாட்டு மானக் கர்கள் படிக்கிருர்கள். புதுச்சேரி பிரெஞ்சு அரசின்கீழ் இருந்தபோது அதற்கும் பாரிஸுக்கும் தொடர்பு இருந்தது. அப்போது வந்த தமிழர்களும் பின்பு வந்த தமிழர்களுமாக மிகச் சிலர் அந்நகரில் இருக்கிருர்கள். நூறு அல்லது இருநூறு பேர்களுக்குள்ளேதான் இந்தத் தமிழ் ஜனத் தொகை அங்கே இருக்கலாம்.

தமிழ்மொழி வழங்காத பாரிஸில் உலகத் தமிழரங்கு கூடியது அரிய செயல். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பேராசிரியர் ழான் பிலியோஸா அவர்கள். புதுச்சேரியில் இந்திய ஆராய்ச்சிக் கழகம் ஒன்று இருக் கிறது. அதன் தலைவர் அவர். சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சிக் கழக த்தின்தலைவராகவும் அவர்இருக்கிரு.ர். பாரிஸிலுள்ள காலேஜ் த பிரான்ஸ் என்ற கல்லூரியில் பேராசிரியராக விளங்குகிருர். அவருக்குத் தமிழிலும் வட மொழியிலும் நல்ல பயிற்சி உண்டு. பு துச்சேரியிலுள்ள இந்தியக் கலைக் கழகத்தின் சார்பில் அவருடைய பார்வை iன்ழ்ைப் பல ஆகமங்களே மொழிபெயர் த்திருக்கிருர்கள். சங்க நூல்களை மொழிபெயர்த்திருப்பதோடு, வேறு பல தமிழ்நூல்களையும் பிரெஞ்சு மொழியில் ஆக்கிவருகிருர்கள். சங்க நூல் சொல்அகராதி ஒன்றை இப்போது தொகுத்து வருகிருர்கள்."

பேராசிரியர் பிலியோஸாவே இந்த முறை பாரிஸில் உலகத்தமிழ்க் கரு த்தரங்கு நடை. பெறவேண்டும் என்று தீர்மானித்து, அதற்குரிய முய ற்சியை மேற்கொண்டார். பாரிஸில் யுனெஸ்கோ நிறுவனம் இருக்கிறது. இலக்கிய விஞ்ஞானக் கலைத்துறை த் தொண்டு செய்ய ஐ.நா. சபை யின்ர் அமைத்த கிலேயம் அது. அதில் அப்போது பொது

இப்போது வெளியாகிவிட்டது.