பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 முதல் நாள் விழா

உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கில் ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு துறையைப் பற்றிய ஆராய்ச்சி ாடைபெற்றது. பல்வேறு அறிஞர்கள் கட்டுரைகளைப் படித்தார்கள். பிறகு அவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாறல்கள் நடைபெற்றன. பெரும்பாலும் கட்டுரைகள் ஆங்கிலத்திலே இருந்தன. ஓரிருவர் பிரெஞ்சு மொழியில் படித்தனர். மலேசியாவில் நடந்த இரண்டாவது கருத் தரங்கில் பேசிய ஆராய்ச்சிகளைத் தொகுத்துப் பெரிய புத்தகமாக வெளியிட்டிருக்கிருர்கள். அவ்வாறே இந்த மூன்ருவது மாநாட்டில் படிக்கப்பெற்ற கட்டுரைகளேயும் தொகுத்து வெளியிடக்கூடும் என்று எண்ணுகிறேன்.

முதல் நாள் முற்பகல் தொடக்க விழாவில் தமிழ் நாட்டு முதலமைச்சர் கலந்து கொள்வதாக முதலில் சொன்னர்கள். அவர் லண்டனில் கண் மருத்துவம் செய்து கொள்ளப் போக வேண்டியிருந்தமையால் அவர் வர இயலாது என்று பிறகு, ஒரு செய்தி வந்தது. முதலமைச்சரே தொடக்க உரை பேசுவதாக இருந்தது மாறித் திரு மால்கம் ஆதிசேவுையா அவர்கள் தொடக்கவுரை ஆற்றுவதாக ஏற்பாடாயிற்று. தம் தொடக்க உரையை அவர் எழுதி அச்சிட்டுவிட்டார். இந்த கிலேயில், தமிழக முதலமைச்சர் லண்டனிலிருந்து பறந்து வந்து மாகாட்டைத் திறந்து வைத்துப் பேசுவா ரென்ற செய்தி மறுபடியும் வந்தது. ஆகவே, நிகழ்ச்சி கிரலில் பேராசிரியர் ழான் பிலியோஸாவுக்குப் பிறகு திரு மால்கம் ஆதிசேஷையாவின் உரை, தமிழக முதல்வர்.