பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா 73

அதன் பொழிப்புரை பின்வருமாறு: "சுழல்கின்ற உலகத்தில் சுழலாத ஒர் இடம். ஊனும் இல்லை; ஊன் இல்லாமலும் இல்லை. அதிலிருந்தும் இல்லை; அதை நோக்கியும் இல்லை. அந்த அசைவற்ற இடத்தில் நடனம் உண்டு; ஆல்ை அங்குத் தடையும் இல்லை, அசைவும் இல்லை. அதை கிலையானது என்று கினைக்க வேண்டாம். இறந்தகாலமும் வரும் காலமும் ஒருங்கே இணைந்து சேரும் இடத்தில்... அந்த அசைவற்ற இடத்தைத் தவிர, கடனமே இல்லை.

惨 鳞爵

கடனம் மட்டுமே உண்டு. - திருக்குறளின் சிறப்பையும் அவர் எடுத்துக் காட்டினர் N” ஆன்மிக அறிவுடை நிலைக்கும். நன்னெறியில் அமையும் வாழ்க்கை அநுபவத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு, தமிழ்க் கலாசாரத்தின் பண்பாடு என்பது பலரும் அறிந்த உண்மை. உலக சக்தியையும் வாழ்க்கையின் உறுதியான தன்னம்பிக்கையையும் குறளிலே கண்டார், டாக்டர் ஆல்பர்ட் ஸ்வெட்ஜர். இலக்கியம், தத்துவம் இவற்றில் தனிச் சிறப்புடன் விளங்கும் இந்தப் புராதன நூல், எளிய திேநெறியின் வழியே இயங்கும் மனித இனத்தையே இலட்சியமாகச் சித்திரிக்கிறதென்று அவர் கூறுகிருர்.'

வெளி நாடுகளுடன் தமிழ்நாடும் தமிழ் மக்களும் கொண்டிருந்த உறவைப் பற்றிய ஆராய்ச்சி மிகவும் இன்றி யமையாதது என்பதை அவர் வற்புறுத்திப் பேசினர்.

"தமிழாராய்ச்சி என்பது உண்மையாகவே ஒரு சர்வ தேச ஆராய்ச்சி என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. அவற்றில் சில: .

1. தமிழர் நாகரிகம் கடல் கடந்து, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய காடுகளுக்குப் பரவியது. - -

2. சீன தேசத்தில் புதை பொருள் ஆராய்ச்சி ஸ்தலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள். 3. பர்மா, கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் நடை முறையில் காணப்படும் விழாக்கள். சடங்குகள்.