பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கண்டறியாதன கண்டேன்

யிருந்தேன். அப்படி எழுதிய மை உலர்வதற்கு முன்னே, 'பாரிஸைப் பார், லண்டனைப் பார்' என்று ஆண்டவனே உத்தரவிட்டதைப் போல இந்தக் கடிதம் வந்தது. கான் கனவிலும் பாரிஸுக்குப் போவேன் என்று எண்ணவில்லை.

மூன்ருவது உலகத் தமிழ் மாநாடு பாரிஸில் நிகழப் போகிறது என்ற செய்தியை முன்பே பத்திரிகைகள் வெளி யிட்டன. ஆனால் யார் யார் போகப் போகிருர்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தம்முடைய ஊகத்தைக் கொண்டு, இன்னர் இன்னர் போவார்கள் என்ருர்கள். "நீங்களும் போவீர்கள்' என்று என்னிடம் அபிமானம் உள்ளவர்கள் சிலர் சொன்னதுண்டு. முதல் இரண்டு மாநாட்டிலும் கலந்துகொண்டவன் நான். ஆனலும், 'பாரிஸுக்குப் போக எத்தனையோ பேர்கள் ஆவலாக இருப்பார்கள்: முயற்சி செய்வார்கள். அந்தப் போட்டியிலே நமக்கு எங்கே வாய்ப்புக் கிடைக்கப் போகிறது?’ என்ற எண்ணத்தால் அதைப் பற்றிச் சிந்திக் காமலே இருந்தேன். இந்தக் கடிதம் வந்து என்னைச் சிந்திக்க வைத்தது. -

நண்பர்களும் உறவினர்களும், 'போய் வாருங்கள்' என்று ஊக்கமூட்டவே நான் வருவதாக இசைவு தெரி வித்துவிட்டேன். போகிற இடத்தில் உணவு, உடை, பழக்க வழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தேன். உணவு விஷயத்தில் நான் சுத்த சைவம். முட்டை கலந்திருக்கிறதென்று ஓவல்டின்னே சாப்பிடாதவன். மேல் காட்டில் ஊன் கலப்பில்லாத உணவு கிடைக்குமா? என்னுடைய இயல்பான கதர் வேட்டி, கதர் ஜிப்பாவுடன் போனல் போதுமா? என்ன என்ன கொண்டு போக வேண்டும்?-இவற்றைப் பற்றி எண்ணினேன். பிறரோடு உசாவினேன். ஆளுக்கு ஒருவித மாகத் தங்கள் தங்கள் கருத்துக்களே நண்பர்கள் சொன்னர்கள்: 'அங்கே போனல் முட்டை சாப்பிட வேண்டும். மேல்நாட்டினருக்கு முட்டையும் காய்கறியோடு