பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா 75.

கண்ணே விடத் தமிழ் சிறந்ததென்று இங்கே வந்தேன்" என்று கூறித் தம் ஆர்வத்தைப் புலப்படுத்தினர்.

பிரெஞ்சுக் கலாசாரம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமான தென்றும், தமிழ் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இலக்கியப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன என்றும் உரைத்தார். "நான் வர்ஸேல்ஸ் போயிருந்தேன். அங்கே ஆண்ட மன்னர்கள் கையாண்ட பண்டங்களையும் வாழ்ந்த அரண்மனையையும் பார்த்தேன். 'தமிழ் காட்டோடு தொடர் புடையது ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டேன். "இருக்கிறது' என்று சொல்லி ஒரு கடிகாரத்தைக் காட்டி ஞர்கள். தூப்ளே துரை அந்தக் கடிகாரத்தை எடுத்துச் செல்ல எண்ணியிருந்தாராம். ஆனல் அதை அனுப்ப வில்லையாம்' என்று ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னர். உலகத்தில் பல நாடுகளில் தமிழர்கள் வாழ்வதைப் பற்றிச் சொல்லி, "அவர்களில் பலர் தமிழை நாளடைவில் மறந்து வருகிருர்கள். அவ்வாறு நடக்காமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும்' என்ருர்.

"நான் ஒரு நாட்டுக்குப் போயிருந்தேன். அங்குள்ளவர் களோடு பேசும்போது மொழிபெயர்ப்பாளராக ஒரு தமிழரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் தமிழ் காட்டிலிருந்து போனவர். மற்றவர்கள் பேசுவதை எனக்கு எடுத்துச் சொல்லும்போது தடுமாறினர். "மொழி பெயர்ப்பதாக ஏற்றுக்கொண்டு தடுமாறுகிறீர்களே! ஏன்?" என்று கேட்டேன். 'பேசும்போது தானே வந்துவிடும் என்று எண்ணினேன். ஆனல் சரியான வார்த்தைகள் வரவில்லை என்ருர். அவருக்கு ஆர்வம் இருந்தும் தமிழ் வார்த்தைகள் மறந்துவிட்டன. இந்த கிலேயை மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்' என்று தாம். கண்டதை எடுத்துரைத்தார்.

தமிழில் புதிய புதிய துறைகளில் முன்னேற்றம் உண்டாகி வருவதை எடுத்துரைத்து, தமிழ்நாட்டு மாளுக் கர்கள் பிற நாடுகளுக்குச் சென்று பயில வேண்டுமென்றும்,.