பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“ss கண்டறியாதன கண்டேன்

அறிஞர்கள் பழந்திராவிட நாகரிகம் என்றே கருது கிருர்கள். இன்னும் முடிந்த முடிவாக எந்தக் கருத்தும் உருவாகவில்லை. ஆராய்ச்சிகள் கடந்துகொண்டே இருக்

கின்றன. .

முதல் நாள் பிற்பகலில் முதல் மூன்று உரைகளும் இப்படிக் கருத்து வேறுபாடுகளைக் காட்டுவனவாக இருக்க, நல்லவேளேயாக, நாலாவதாக வந்த ஆராய்ச்சியுரை எல்லோ ருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குவதாக அமைந்தது. திரு ரா. நாகசாமி தொல் பொருளாராய்ச்சியில் கண்டுபிடித்த வற்றைப் பற்றிப் பேசிய ஆராய்ச்சி உரை பல புதிய செய்திகளே விளக்கியது. பல இடங்களே அகழ்ந்து செய்த ஆராய்ச்சியினல் கண்டுபிடித்த சிலவற்றை அவர் எடுத் துரைத்தார். அவர் உரையில் கேட்ட சில செய்திகள் வருமாறு: -

காவிரிப்பூம்பட்டினத்தில் அகழ்ந்தபோது ஒரு புத்த விகாரத்தின் பகுதிகள் கிடைத்தன. கி. பி. 4-ஆம் நூற்ருண்டில் புத்ததத்தர் என்பவர் அபிதம்மாவதாரம், புத்தவம்ஸ் அட்டகதா என்ற பிராகிருத நூல்களே இயற்றினர். சோழநாட்டை ஆண்ட அச்சுத விக்கிராங்தன் என்ற களப்பிர அரசன் காலம் அது. அந்த நூல்களை ஒரு புத்த விகாரத்தில் தங்கி எழுதியதாகப் புத்த தத்தர் குறிப்பிடுகிருர். அந்தப் புத்த விகாரம் இப்போது அகழ்ந்த பகுதிகளையுடைய விகாரமாக இருக்கலாம். -

மாமல்லபுரத்தில் உள்ள கோயில்களைக் கட்டியவன் முதலாம் நரசிம்மவர்மன் என்றே இதுகாறும் பல அறிஞர்கள் எழுதியிருக்கிருர்கள். ஆனல் அவற்றை எழுப்பியவன் காஞ்சியிலுள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்மன் என்று கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு நிச்சயிக்கலாம். மாமல்லபுரத்திலுள்ள சிலேயுரு வங்கள் ஆகமங்களில் காணும் விதிகளுக்கு ஏற்பiஅமைக்கப் பெற்றிருக்கின்றன.