பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 83.

வந்திருந்தார். லண்டனில் ஒரு தமிழ் மாதப் பத்திரிகை கடக்கிறது. லண்டன் முரசு என்று பெயர். முகப்புப் பக்கத்தை அச்சிட்டுப் ப்ளாக் எடுத்து இணைத்திருக் கிருர்கள். உள்ளே உள்ள பக்கங்களைக் கையால் எழுதி ஸைக்ளோஸ்டைல் பண்ணிப் பத்திரிகையை உருவாக்கு கிருர்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் திரு சதானந்தன் வந்திருந்தார். லண்டனிலிருந்து வந்தவர்களில் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அடிக்கடி இலங்கைக்குப் போய் வருபவன் ஆதலின் என்னே அவர்களிற் பலர் தெரிந்து கொண்டிருந்தார்கள். எனக்கு நன்கு அறிமுக மான சிலரையும் அந்தக் குழுவில் கண்டேன்.

இரண்டாவது நாள் கருத்தரங்கில் காலே நிகழ்ச்சி களுக்கு ஹாலந்து தேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் க்யூபர் (Prof. F. B. J. Kuiper) தலைமை தாங்கினர். சங்க இலக்கிய சம்பந்தமாக மூன்று அறிஞர்கள் மூன்று கட்டுரைகளைப் படித்தார்கள். திருவனந்தபுரம் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு வி. ஐ. சுப்பிரமணியம் சங்க இலக் கியங்களின் கால அடைவைப் பற்றிக் கூறினர். அமரர் வையாபுரிப் பிள்ளையவர்கள் கண்ட முடிவுகளே அவர் மறுத்துரைத்தார். கம்ப்யூட்டர் மூலமாகத் தாம் அறிந்த முடிவுகளைச் சொன்னர். அவர் கூறிய கால அடைவு வருமாறு:

குறுந்தொகை கி. மு. 180 ஐங்குறுநூறு கி. மு. 120 பத்துப் பாட்டு கி. மு. 80 புறநானூறு கி. பி. 60 பதிற்றுப்பத்து கி. பி. 150 அகநானூறு கி. பி. 210 நற்றிணே கி, பி. 230 கலித்தொகை கி. பி. 250 பரிபாடல் இ. பி. 290

சிலப்பதிகாரம் கி. பி. 310