பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பட முடியுமா?. 3.

சேர்த்திதான். நம்முடைய சைவ உணவு அங்கே கிடைக்காது’ என்று சிலர் அச்சுறுத்தினர்கள். 'குதிரை இறைச்சி கலவாத சோறே பாரிஸில் கிடையாதாம். அரிசிச் சோற்றில் அதைக் கலந்திருப்பார்களாம். என் நண்பன். ஒருவன் சொன்னன்' என்று ராணுவத்தில் வேக்ல பார்க்கும் ஒருவர் கூறினர். "தண்ணிரே அங்குக் கிடைப்ப தில்லை. கொஞ்சமாவது வேறு வகையான பானத்தை அங்கே அருந்தத்தான் வேண்டும். பீர்சாப்பிடலாமே! அது மயக்கம் தராது. அதைச் சாப்பிடுவதில் தவறும் இல்லை” என்று சிலர் உபதேசம் பண்ணினர்கள். 'எப்படியும் ங்ேகள் கம்பளியினல் ஆன கால் உறைகளே (Pants) அணிந்து செல்ல வேண்டும். கம்பளிக் கோட் போட வேண்டும். அங்கே பணியாக இருக்கும். பனிக்கட்டியில் உறைந்துவிடுவீர்கள்' என்று அபாய எச்சரிக்கை விடுத்தனர் சிலர். -

தம்முடைய இயற்கையான ஆடைகளுடன் மேல் நாட்டுக்குச் சென்ற இரண்டு பேர்களுடைய நினைவு எனக்கு வந்தது. ஒருவர் மகாத்மா காந்தி. மற்ருெருவர் திரு காமராஜர். மகாத்மா காந்தி தவ வலிமை உடையவர். இயற்கையான உடைகளுடன் திரு. காமராஜர் போனரே. தாம் ஏன் போகக்கூடாது?. -

அப்போது என்னுடைய அச்சத்தைத் தீர்க்க ஒரு கண்பர் வந்தார். என். வி. எஸ். மணியன் என்ற பெய் ருடையவர் அவர். அவர் ஒரு தொழிற்சாலையை நடத்து பவர்; வெளி நாடுகளுக்குப் பண்டங்களே ஏற்றுமதி செய்கிறவர்; மேல் நாடுகளுக்குப் பலகால் பயணம் செய்து வந்தவர்; தெய்வ பக்தி உடையவர்: என்னிடம் அளவற்ற் அன்புடையவர். அவர் வந்தபோது அவரிடம் மேல் க்ாட்டுப் பயணத்தைப்பற்றிக் கேட்டேன். "இப்பொழு தெல்லாம் அங்கே கோடைக் காலம். நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். நான் வேட்டியுடன் பல் இடங் களுக்குப் போயிருக்கிறேன். என் வாடிக்கைக்காரர்.