பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34' கண்டறியாதன் கண்டேன்.

இந்தக் கால அடைவில் 10 சதவிகிதம் முன் பின்னக இருக்கலாம் என்று அவர் கூறினர். <

ஒருவர் ஒரு கட்டுரை படித்தபின் அது பற்றிய கருத்துப் பரிமாறல்கள் சிறிது நேரம் நடைபெறும். அந்த வகையில் இந்தக் கால அடைவு பற்றிய கருத்துக்கு ஒரு தடையை. எடுத்துக் கூறினர். டாக்டர் மு. வரதராசனர். குறுங் தொகை முதலிய சங்க நூல்களில் ஒரே ஆசிரியர் பாடிய பாடல்கள் வெவ்வேறு நூல்களில் உள்ளன. ஒருவர் ஒரு கட்டுரைத் தொகுதியை வெளியிடுகிருர். அதில் பல ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்திருக்கிருர். மற்ருெருவர் வேருெரு கட்டுரைத் தொகுப்பை வெளி யிடுகிருர். அதில் முன் கட்டுரைத் தொகுதியிலுள்ள எழுத்தாளர்களின் கட்டுரைகளை வெளியிடுகிருர். முதல் கட்டுரைத் தொகுதியின் காலம் ஒன்ருகவும், இரண்டாவது கட்டுரைத் தொகுதியின் காலம் வேருகவும் இருக்க முடியுமா? ஒரே ஆசிரியருடைய கட்டுரைகள் இரண்டிலும் இருக்கின்றன. இரண்டு தொகுதிகளின் காலமும் வெவ்வேறு என்று முடிவு செய்தால், முன் கட்டுரை எழுதியவரே இரண்டாவது கட்டுரையையும் எழுதியவராக இருக்க, அவர் இருவேறு காலத்தில் இருந்தவராக அல்லவா முடியும்? சங்க நூல்களிலும் வெவ்வேறு தொகை நூலிலுள்ள பாடல்கள் வெவ்வேறு காலங்களில் பாடப். பட்டவையானல், ஒரே புலவர் இருநூறு முந்நூறு ஆண்டு களுக்கு மேல் வாழ்ந்தவராக இருக்க வேண்டுமே!

இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லி டாக்டர் மு. வ. சங்க நூல்களின் கால அடைவைப் பற்றிய தம்முடைய ஐயத்தை எழுப்பினர். -

இரண்டாவது ஆராய்ச்சியுரையை நிகழ்த்தியவர் டாக்டர் மு. வ. அஃறிணைப் பொருள்களே நோக்கிப் பேசுவ: தாகச் சங்க நூல்களில் உள்ள பாடல்களைப் பற்றிய உரை அது. அந்தப் பழங்காலத்தில் இந்த முறை பிற மொழிகளில் அருகியே காணப்படுகின்றது என்றும், சங்க