பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கண்டறியாத்ன கண்டேன்

Gem'dir yerdir(Robert Saint Jeans)erdirgyit GLugar Luouir. அவர் காரைக்காலில் ஒரு தமிழ்ச் சங்கம் கடத்தினர். அங்கே முன்பு பேசப் போயிருக்கிறேன். அவர் பாரிஸ் மாநகரம் சென்று அரசாங்கப் பணி ஆற்றினர். இப்போது ஒய்வு பெற்றிருக்கிருர். ஒரு தமிழ்ப் பத்திரிகையைப் பாரிஸ் நகரில் நடத்த வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்காக என்ன என்னவோ முயற்சி செய்தார். என்னே யோசனை கேட்டு எழுதினர். என் கருத்துக்களைத் தெரி வித்தேன். ஆயினும் அவரால் அந்தப் பத்திரிகையை வெளியிட முடியவில்லை. அவர் பாரிஸில் சட்ட சபைக்குத் தேர்தலில் நின்று தோல்வியுற்றவர். பாரிஸில் பல ஆண்டுகள் இருந்தவராதலின் அம் மாநகரின் மூலே முடுக்கு களெல்லாம் தெரியும். எங்கே போனலும் பிரெஞ்சு மொழியையன்றி வேறு ஒன்றையும் கேட்க முடியாமல் திண்டாடிய எனக்கு அவரைக் கண்டது சஞ்சீவி மலையையே கண்டது போலாயிற்று. அவர் நன்ருகப் பிரெஞ்சு மொழி பயின்றிருக்கிருர். ஆங்கிலமும் பேசுவார். பிறப்பால் தமிழர். அவருடைய துணையால் பாரிஸில் பல இடங்களேக் காணவும் பல செய்திகளே அறியவும் பயன் பெறவும் முடிந்தது.

பாரிளிலிருந்து லண்டன், பிராங்க்பர்ட், ரோம் முதலிய ககரங்களுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்த இடங்களுக்குப் போக விஸா வாங்க வேண்டுமானல் கிழற்படங்கள் வேண்டியிருக்கும். "பாஸ் போர்ட்டு அளவுப் படங்கள் எடுக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று நண்பர் ஸேன் ழானக் கேட்டேன். "இது என்ன பிரமாதம்? என்னேடு வாருங்கள்' என்று. கூறினர், 'இந்தக் கணம் முதல் பாரிஸில் தங்கும்வரையில் நீங்கள் எங்கே கூப்பிட்டாலும் வருகிறேன். என்ன செய்யச் சொன்னலும் செய்கிறேன்" என்ருர். கண்ணு கவும் காதாகவும் வாயாகவும் காலாகவும் அவர் எனக்கும் என்னுடன் வந்த நண்பர்களுக்கும் உதவி புரிந்தார். அவர்