பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“安2 கண்டறியாதன கண்டேன்

டாக்டர் டி'ஆர்ஸி ஹேமன், கலைப் பகுதிக்குத் தலைமை &mióLair. (Dr. d’Arcy Hayman, Head: Section of the Arts in Education and the Cultural Development of the Community Division of Arts and Letters—Unesco.) என்னைப் பற்றிக் கேட்டார். என் வேட்டியையும் அதன் கரையையும் கண்டு வியந்தார். "இது என்ன துணி?” என்று கேட்டார். நான், 'இது கதர். மகாத்மா காந்தி அடிகள் ஆணப்படிதேச பக்தர்கள் இதை அணிந்தார்கள். கையால் நூற்றுக் கையால் நெய்த துணி இது' என்றேன். 'மிகவும் நன்ருக இருக்கிறது' என்ருர். கலைமகள் பத்திரிகையைப் பற்றி விசாரித்தார், இருபது கிமிஷம் என் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். என்னுடைய கண்பர்களில் சிலர் இதைக் கண்டு பிறகு, "என்ன பேசினர், என்ன பேசினர்?' என்று ஆவலுடன் விசாரித் தர்கள். நான் சொன்னேன். şa அப்போது, பாரிஸுக்குப் புறப்படுகையில் சில \{ஆன்பர்கள் அச்சுறுத்தியது நினைவுக்கு வந்தது. "நீங்கள் திே இந்த உடையுடன் சென்ருல் அங்கே வீதியிலே போக முடியாது. விருந்துகளில் கலந்துகொள்ள முடியாது. அங்கெல்லாம் உடை வரையறை உண்டு' என்ருர்கள். "பரவாயில்லை. விருந்துக்கு என்னை அழைக்காவிட்டால் விருந்து அளிப்பவருக்கும் கஷ்டம் இல்லை; எனக்கும் கஷ்டம் இல்லை. அந்த கே ரத் தி ல் ஏதாவது இடத்தைப் போய்ப் பார்த் து வருவேன்' என்று சொன்னேன். அவர்கள் சொன்னது இப்போது கினேவுக்கு வந்தது. அவர்கள் எதைக் குறையாகச் சொன்னர்களோ, அந்த உடையையே இந்தப் பெண்மணி பாராட்டி என்னுடன் உரையாடியபோது. உண்மையில் எனக்குச் சற்றுப் பெருமிதமாகவே இருந்தது.

யுனெஸ்கோ விருந்தில் திரு மால்கம் ஆதிசேஷையா ஓர் உரை ஆற்றினர். அதில் ஐ. கா. சபை தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சொன்னர். அந்த விருந்துக்குப் பிறகு யுனெஸ்கோக் கலையரங்கத்தில் பரதநாட்டியம்