பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 93.

கடைபெற்றது. முதலில் இலங்கையைச் சேர்ந்த குமாரி ஆனந்தவல்லி நடனமாடினர். வள்ளி முருகன் நடனத்தை அவர் ஆடிக்காட்டினர். பிறகு டைரெக்டர் சுப்பிரமணி யத்தின் புதல்வி குமாரி பத்மாவின் நடனம் நடை பெற்றது. மிகவும் நல்ல முறையில் அவருடைய நடனம் இருந்தது. கடைசியில் பரிபாடலிலிருந்து சில காட்சிகளே நடனமாக ஆடிக் காட்டினர். மகாநாட்டுக்கு வந்திருந்த வர்கள் அதை நன்ருக ரசித்து இன்புற்ருர்கள்.

எல்லாம் முடிந்தவுடன் நான் இருப்பிடத்துக்குத் திரும்பியபோது, "ஈஃபெல் கோபுரத்தைப் பார்த்துவிட லாமா?’ என்று ஸான் ழான் சொன்னர். "இரவு நேரத். தில் பாரிஸ் மாநகர் முழுவதையும் அங்கிருந்து பார்க்கலாம்” என்ருர், அங்கே போைேம்.

'பாரிஸுக்குப் போனேன்' என்று யாரி ட ம் சொன்னலும், 'ஈஃபெல் டவரைப் பார்த்தாயா?' என்று கேட்பார்கள், அவ்வளவு புகழ்பெற்றது அந்த அமைப்பு. ஈ:பெல் (Eiffel) என்ற எஞ்சினியர் அதைக் கட்டி அமைத்தார். முழுவதும் எஃகினல் அமைந்தது. 7000 டன் எடை உள்ளது. நாலு கால்களின்மேல் கிற்கிறது இந்தக் கோபுரம். மூன்று அடுக்குக் கோபுரம் இது. முதலடுக் கிலும் இரண்டாது அடுக்கிலும் உணவுச் சாலைகள் இருக் கின்றன. முதல் அடுக்கு 187 அடி உயரத்திலும், இரண் டாவது அடுக்கு 377 அடியிலும், மூன்ருவது அடுக்கு 898, அடியிலும் உள்ளன. உச்சியின் உயரம் 1058 அடி. இரண்டு அடுக்கு வரையில் லிப்ட் மூலம் போகலாம். அதற்கென்று கட்டணம் உண்டு. மூன்ருவது அடுக்கில். "டெலிவிஷன் கிலேயம் இருக்கிறது. இதைக் கட்டி. முடித்தபோது பலர், 'இதல்ை என்ன பயன்? வீண் செலவு சுத்தப் பைத்தியக்காரத்தனம்' என்று பரிகாசம் செய்தார்கள். இப்போதோ ஒலிபரப்பவும் டெலிவிஷனைப் பரப்பவும் இது மிகவும் உபயோகமாக இருக்கிறது. இத்தகைய தனி உருக்குக் கோபுரம் வேறு எங்கும் இல்லை. 1887ஆம் ஆண்டில் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் பல