கண்ணகி கதை
11
வசனம்
புகழும் இன்பமும் பொங்கும் புகார் நகரத்திலே இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என்னும் மூவகை வணிகர்கள்-அஃதாவது வியாபாரம் செய்யும் செல்வச் செட்டிமார்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்பர் என்பார் குறைந்த செல்வமுடைய செட்டிமார்கள். பெருங்குடியர் என்பார் நிறைந்த பெருஞ்செல்வமுடைய செட்டிமார்கள். கவிப்பர் என்பார் நடுத்தரமான செல்வமுடைய செட்டிமார்கள். பெருங்குடியர் என்பார் அரசனைப் போன்ற பெருஞ் செல்வமும் அரும்புகழும் படைத்த பெரிய வியாபாரிகள் ஆவார்கள்.பெருங்குடியர் என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. என்றாலும் மதுவை விலக்கிய நம் நாட்டில் அந்தப் பொருளை இந்தக்காலத்தில் கொள்ளமாட்டீர்கள். பெருங்குடியர் மரபிலே பிறந்த சிறந்த செல்வனாகிய மாநாய்கன் என்பான் ஒருவன் இருந்தான். அதே மரபில் மாசாத்துவான் என்னும் வணிகனும் சிறந்து விளங்கினான்.
வானம்போல் வழங்கிடும் வள்ளல்
மாநாய்கன் மாதவச் செல்வன்
மேனாளில் செய்த தவத்தால்
மேன்மையுற வந்த குலக்கொடி
திருமகளும் அவளை யொப்பாள்
தீதில்லா அருந்ததி கற்பாள்
பெருமையுறு குணங்கள் எல்லாம்
பேணுவாள் கண்ணகிப் பேராள்
நாடாளும் மன்னனை யொப்பான்
நற்குடியில் செல்வம் மிக்கான்
தேடிவரும் செல்வம் எல்லாம்
செய்யவறம் செய்து உவப்பான்
2