14
பயிலும் நீல விதானமிட்டார்
பன்மணி முத்துப்பூம் பந்தலிட்டார்
அருந்ததியன்னாள்கண்ணகியாள்
அணிமணம் காண நிறைந்துவிட்டார்
பெருந்தகைக் கோவலன் திருமணத்தைப்
பேணியே கண்டிடச் சூழ்ந்துவிட்டார்
பண்ணிய புண்ணியம் யாதையா
பார்த்தவர் வியந்து மகிழ்ந்துநின்றார்
எண்ணரும் பேரெழில் கண்ணகியும்
இன்பக்கோ வலனும்கை கோத்துநின்றார்
மாமுது குருக்கள் மறைகாட்ட
மகிழ்ந்தவர் தீவலம் செய்துவந்தார்
மாமலர் ஏந்திய மங்கையர்கள்
மணமக்கள் பின்னால் விரைந்துவந்தார்
சந்தனம் தாங்கிய மங்கையரும்
சவ்வாது மணப்பொருள் தாங்கினரும்
கந்தமார் நறும்புகை ஏந்தினரும்
காசில் விளக்கொளி ஏந்தினரும்
பாலிகை முளைக்குடம் தாங்கினரும்
பன்மணிக் கலங்களைத் தாங்கினரும்
சாலவும் கமழ்சுண்ணம் தாங்கினரும்
சற்றும் அகலாது சூழ்ந்துவந்தார்
மாமலர் தூவியே வாழ்த்திநின்றார்
மதனும் ரதியும்போல் வாழ்க! என்றார்
தாமரைக் கண்ணனும் தையலும்போல்
தாரணி வாழ்க!வாழ்க!என்றார்.
இந்திரன் இந்தி ராணியைப்போல்
இன்ப மணக்கோலம் தாங்கிநின்ற