16
கண்ணகிகதை
பாட்டு
எழுநிலை மாடத்தில் நடுநிலை மாடத்தில்
முழுமணி பதித்திட்ட மொய்யொளி யார்கட்டில்
வாசநன் மலரெல்லாம் தேசுறப் பெய்திட்ட
வீசொளி பொற்கட்டில் மேவினர் இருவோரும்
கோலங்கொள் சாளரத்தின் குறுங்கண் வழியாக
மால்தரும் மென்காற்று வந்திடும்இன் தென்றல்
கண்டனர் மணமக்கள் காதலின் மிக்கார்கள்
கொண்டனர் அணியெல்லாம் விண்டனர் தம்முள்ளம்
ஏறினர் நிலாமுற்றம் இயன்மதி கண்டார்கள்
வீறின பேரின்பம் மேவினம் என்றார்கள்
பூக்கள் நிறைசேக்கை புகுந்தினி திருந்தார்கள்
கோக்கள் புகழ்செல்வன் கோவலன் மனம்பொங்கிக்
கண்ணகி எழில்கண்டான் பண்ணமை மொழிகொண்டான்
தண்ணொளி நலமுண்டான் தன்னுள நிலைசொன்னான்
மாசறு பொன்னே! நல் வலம்புரி முத்தே!என்
காசறு விரையேlமென் கரும்புறு தீந்தேனே !
அரும்பெறற் பாவாய்! என் ஆருயிர்க்கு ஒர்மருந்தே !
பெருங்குடி வாணிகன்றன் பெருமட நன்மகளே !
என்சொல்லிநின் னலங்கள் ஏத்துவன் இப்போதென்றான்.
இசை வேறு
மலையிடைப் பிறவா மணியே என்கோ !
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ !
யாழிடைப் பிறவா இசையே என்கோ !
தாழிருங் கூந்தல் தையலே ! உன்னை
இசை வேறு
கண்ணகிப் பெண்ண ணங்கின்
கட்டழ கதனைக் கண்டு