உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணகிக் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணகி கதை

19

உலகிலுறும் அழகெலாம் ஒருங்குதிரள் செல்வி
அலகில்பல கலைகளும் நிலைபெறு குணங்களும்
தேடியவள் காலடியை நாடிவரும் ஐயா !
கோடிப்பொன் ஈந்தேனும் கொள்ளலாம் அவளை

வசனம்

இங்ஙனம் கணிகையர் குலத்திலே பிறந்து, இயற்கையிலேயே அறிவும் அழகும் ஒருங்கு செறிந்த பெருங்குணச் செல்வியாகிய மாதவிக்கு ஐந்தாண்டுகள் நிரம்பின. அப்போது சித்திராபதியாகிய அவள் தாய் அவளுக்கு நாட்டியக் கலையில் வல்ல நல்லாசிரியர்களைக் கொண்டு நடனக்கலையைப் பயிற்றுவித்தாள். இசைக்கலையில் வல்ல இன்னிசை வாணர்களைக் (சங்கீத வித்துவான்கள்) கொண்டு இசையைப் பயிற்றுவித்தாள். ஏழாண்டுகள் இசை, நடனம் ஆகிய இரு கலைகளையும் நன்றாக முயன்று பயின்றாள் மாதவி. ஆடல், பாடல், அழகு என்னும் மூன்றிலும், தனது பன்னிரண்டு வயதுப் பருவத்தில் தன்னகரில்லாத பெண்ணணங்காய் விளங்கினாள். மாதவியின் ஒய்யார நடனத்தையும் உல்லாச கானத்தையும் ஒப்பற்ற பேரழகையும் பார்த்துப்பார்த்து உள்ளம் பூரித்த அவள் தாய், கரிகாற் சோழமன்னன் திருமுன்பை அடைந்தாள். மகள் மாதவியின் ஆடல், பாடல், அழகு ஆகியவற்றை விளக்கிக் கூறினாள். அவளது நாட்டிய அரங்கேற்றம் மன்னன் பேரவையில் மாண்புற நடைபெறவேண்டும்; அரசனின் அன்பு வாழ்த்து அவளுக்குக் கிடைக்கவேண்டும் என்று பணிவுடன் வேண்டிக்கொண்டாள். அரசன் கரிகால் சோழன் நாட்டியக் கலையில் நன்கு தேர்ச்சிபெற்றனன். ஆதலின் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம், தன் சபையிலே நடைபெறச் சம்மதித்தான். அரங்கேற்றத்திற்கு,

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/18&oldid=1306721" இலிருந்து மீள்விக்கப்பட்டது