கண்ணகி கதை
21
சோழமன்னன் கரிகாலன்-கரிகாலன்
சொல்லரிய கோலமுடன்-கோலமுடன் ஆழ்மதிநல் அமைச்சரெல்லாம்-அமைச்சரெல்லாம்
ஆர்ந்துசூழ வந்தடைந்தான்-வந்தடைந்தான்
வந்தடைந்த மன்னவனை-மன்னவனை
வாழ்க என் றுவாழ்த்தியிட்டார்-வாழ்த்தியிட்டார்
வந்தனைகள் செய்துநின்றார்-செய்துநின்றார்
வருகவென்றான் மன்னவனும்-மன்னவனும்
அரங்கேற்றம் தொடங்கிடுவீர்-தொடங்கிடுவீர்
அமைச்சர்களே! அழைத்திடுமின்-அழைத்திடுமின்
சிரங்கொள்ளும் கட்டளையை-கட்டளையை
சித்திராபதி அறிந்திட்டாள்-அறிந்திட்டாள்
இசை வேறு
தாமரைக் குளமென விளங்குதையா
தக்கவர் சூழ்கலை மண்டபமையா
காமரைப் போலங்கு இருந்தனரையா
கற்றவர் நற்றவர் பல்லோர்களையா அவையினர் கண்களோ அன்றலர்தாமரை
என் றியம் பும்படி இலங்கினவையா - நவையற்ற அன்னம்போல் வந்தனளையா
நங்கைபொன் மாதவி மங்கையுமையா தேவமா தோவென வியந்தனரையா
திருமகள் மாதவியைக் கண்டவரையா தேவர்போல் இமையாது இருந்தனரையா
திடுமென முழவொலி கேட்டனரையா யாழிசை குழலிசை முழவிசைஎல்லாம்
இன்னிசை யாகவே முழங்கினவையா