பக்கம்:கண்ணகிக் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கண்ணகி கதை

.

தாழ்குழல் மாதவி ததிங்கிணத் தோமெனத்
     தாள்பெயர்த் தாடினள் பாடினாளையா
ஆடலொலி பாடலொலி கேட்டவர்களையா
     அதன்பின்னர் தன்னிலை அடைந்தனரையா
தேடரிய பேரழகி சீருடைய மாதவி
     தேவமா தவள்போல் ஆடினாளையா மயிலென்ன ஒளிவீசும் மாதவியின் மேனி
     மார்பணிகள் சுடர்வீச மங்கிடும் நாணி குயிலென்ன இசைபாடும் கோதைகலை வாணி
     கோவலன் உளங்கவரும் அவள்நடன பாணி மின்னலின் கொடியென்ன மேனியொளி வீசும்
     மேதக்க மாதவி, கோவலன் மனத்தை இன்னமுதம் எனஆடல் பாடல்பருகு உளத்தை
     ஏற்றமுற நோக்கினாள் ஆற்றலுற ஆடினாள் கலைநுட்பம் உணர்மன்னன் கரிகால் வளவன்
     கட்டழகி மாதவி கலைத்திறமை கண்டான் கலைக்கோல் அரிவையெனப் பட்டத்தை யீந்தான்
     தக்கமர கதமாலை பரிசாகத் தந்தான் ஆயிரத் தெட்டுக் கழஞ்சுப்பொன் னீந்தான்
     அன்போடு அவள்கலைத் திறமையை வியந்தான்
தாயவள் சித்திரா பதியுள்ளம் குளிரத்
     தக்கபுகழ்மொழிகள்பல வாழ்த்துட னுரைத்தான்
மாதவியும் அன்னையும் மன்னவனை நண்ணி
     மலரடி வணங்கிவிடை பெற்றுமனை யுற்றார் சீதவொளி வீசுமரகதமாலை யதனை
     திறமைமிகு கூனிமகள் கையிற் கொடுத்தாள் நம்பியர்கள் பல்லோரும் நாடிவரும் வீதி
     நால்வீதி கூடும் சதுக்கத்தைச் சேர்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/21&oldid=1306806" இலிருந்து மீள்விக்கப்பட்டது