கண்ணகி கதை
23
அம்பொன் ஆயிரத்தெண்
கழஞ்சினைத் தந்தே
அரியமர கதமாலை பெறுவோர்
உவந்தே கலையரசி மாதவியை
அடைவார் விரைந்தே
காதலராய் வாழ்நாள் முழுதும் மகிழ்ந்தே நிலைபெற விருக்கலாம்
எனும்உண்மை கூறி
நேர்மையொடு பெறுவாரை
அழைத்துவாஎன்றாள்
வசனம்
இங்ஙனம் மாதவியால் அனுப்பப்பெற்ற கூனி, நகரத்து நம்பியர்கள், நற்குடி பிறந்த செல்வகாளையர்கள் வந்து கூடும் சந்திச் சதுக்கத்தை அடைந்தாள். பச்சை யொளிவீசும் மணிமாலையைக் கையிலேந்தி நின்றாள். அங்குவந்த பெருங்குடிச் செல்வக்குமரனாகிய கோவலன் அவள் பக்கம் வந்தான். செய்தியைத் தெரிந்தான். சிந்தை உவந்தான். செப்பிய பொன்னைத் தப்பாது கொடுத்தான். அக்கூணியுடன் மாதவியின் மனையை அடைந்தான். மாதவியைக் காதற்கிழத்தியாக ஏற்றான். அவளை சற்றும் விட்டுப்பிரியாது, கட்டித் தழுவிக் காதல் இன்பத்தைப் பெற்றான். கற்புக்கரசியாம் கண்ணகியை மறந்தான். மாதவியின் மனையிலேயே இணைபிரியாது தங்கிவிட்டான். இந்தச் செய்தியை அவனது சொந்த மனைவியாகிய கண்ணகி அறிந்தாள்.
பாட்டு
ஐயோ! அவளடைந்த துயரம் அள வுண்டோ!
மெய்யோ இதுசெய்தி எனக்கதறி அழுதாள்
புண்ணாய் உலைந்தவள் புலம்பியழு திட்டாள்
கண்ணகி மனத்துயரைமாற்றுபவர் யார்தாம்!
நாவல்ல மங்கையர்கள் நவிலுமொழி யாமோ
கோவலன் அன்பன்றோ அவள்துயரை மாற்றும்