கண்ணகி கதை
25
பாட்டு
கற்பரசி கண்ணகியின் காதல்நிறை தோழியவள் பொற்புடைய தேவந்தி புறப்பட்டாள் கோயிலுக்கு
சாத்தன் திருக்கோயில் சார்ந்து வணங்கிட்டாள்
சேர்த்த சிறுபூளை நெல்லறுகு சிந்தியிட்டாள்
கோவலனும் கண்ணகியும் கூட
அருள் புரியென்றாள்
நாவால் துதித்தவனை நயந்து
தொழுதிட்டாள்
கண்ணகியின் இல்லம் கடிதே அடைந்திட்டாள்
என்னரிய தோழி! நீ இன்பம் பெறுவையென்றாள்
ஆருயிர்க் கணவனவன் அன்பார்ந்த
கோவலனும் சேருவான் சீக்கிரமே சிறிதும் கலங்கவேண்டாம் ஐயமின்றி யான் சொன்னேன் மெய்யருளைக் கண்டுரைத்தேன் வையத்தில் பொய்யாது சாத்தன் வழங்குமொழி
கண்ணகியே தேறிடுவாய் கணவன் இதோ! வந்திடுவான் உன்னுடைய தோழியான் உரைத்தமொழி தப்பாது
வசனம்
என்று பலவாறு தேவந்தி, கண்ணகியின் கவலை நிறைந்த மனத்தை மாற்றித் தேற்றிக் கொண்டிருந்தாள். இத்தகைய நாட்களிலே ஒருநாள், காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் இந்திரவிழா வந்து சேர்ந்தது. அன்று சித்திரை மாதம் பெளர்ணமி நாள். சித்திரை நட்சத்திரமும் பூரணசந்திரனும் கூடிய நாள். சித்திரைக்குச் சித்திரையில் சீரார் பெளர்ணமியில் நடைபெறும் விழா இந்திரவிழா.
பாட்டு
இந்திர விழாவின் ஏற்றத்தைக் கேளும் எங்கும் மங்கல முழக்கமே சூழும்
_____________________________